திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆன்லைன் பந்தயத்தில் முதலீடு செய்து, ரூ.2 கோடி கடனாளியான மகன் அடித்தே கொலை; தந்தை அதிர்ச்சி செயல்.!
இன்றளவில் இளைஞர்கள் விரைந்து பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில், தங்களுக்கு தெரிந்த வழிகளில் முதலீடு செய்து பணத்தை இழக்கின்றனர். இதனால் கடனாளியாகி கடன் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல இயலாமல் தற்கொலையும் செய்கின்றனர்.
28 வயது இளைஞரின் துயரம் இது
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம், பாகிராபத் பகுதியில் வசித்து வருபவர் சத்யா நாராயணா. இவரின் மகன் முகேஷ் குமார் (28). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: சமையல் பாத்திரத்திற்குள் தவறி விழுந்து அரசியல்கட்சி பிரமுகர் பலி; செயல்வீரர்கள் கூட்டத்தில் சோகம்.!
தந்தை கண்டித்தும் கேட்காத மகன்
கடந்த சில ஆண்டுகளாகவே சரிவர வேலைக்கு செல்லாத முகேஷ் குமார், எப்போதும் ஆன்லைனில் பணம் கட்டி பந்தய விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளார். இந்த விவகாரம் முகேஷின் தந்தை சத்யா நாராயணாவுக்கு தெரியவந்து அவர் மகனை கண்டித்தும் இருக்கிறார். ஆனால், எந்த பலனும் இல்லை.
கடனை அடைக்க பூர்வீக சொத்துகள் விற்பனை
இதனால் மொத்தமாக ரூ.2 கோடி கடனாளியாக முகேஷ் உருவெடுக்க, சொந்த ஊரில் இருந்த நிலம் மற்றும் வீடு ஆகிய அனைத்தையும் விற்பனை செய்து வந்த பணத்தில் கடன் அடைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையை அவர்கள் அடைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
மகன் அடித்தேகொலை
இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தந்தையின் அறிவுரையை கேட்காமல் தொடர்ந்து ஆன்லைனில் பந்தயம் கட்டி விளையாடிய முகேஷ் குமார் தந்தையால் அடித்தே கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சத்ய நாராயணனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: காவல் ஆய்வாளர் மர்மம் மரணம்; வீட்டில் சடலமாக மீட்பு.!