மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னென்ன நடக்குது பாருங்க... சிகிச்சை என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்த மருத்துவர்..! வெளியான அதிர்ச்சி தகவல்..!
பெங்களூர் யஸ்வந்தபுரத்தை சேர்ந்தவர் வெங்கட்ரமணா. இவர் அந்தப் பகுதியில் அக்குபங்சர் மருத்துவராக உள்ளார். தனது கிளினிக்கு வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தியுள்ளார்.
இந்நிலையில் தான் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் வெங்கட்ரமணா. அவர் தனது கிளினிக் வரும் பெண்களிடம் அக்குபங்சர் சிகிச்சை என்ற முறையில் பல சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சிகிச்சைக்காக பெண்களது ஆடைகளை கழற்ற சொல்லி அவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு அத்துமீறியதாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து பெண்கள் ஆடைகளை கழட்டி சிகிச்சையில் இருக்கும் பொழுது அவர்களை அரைகுறை நிலையில் வைத்து வெங்கட்ராமணா வீடியோ எடுத்துள்ளார். இது பற்றி அங்கு சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு தெரிய வரவே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் மகளிர் காவல் நிலையம் மற்றும் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் போலி டாக்டர் ஆன வெங்கட்ராமணா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் வெங்கட்ராமணாவின் செல்போனை கைப்பற்றி காவல்துறை சோதனை நடத்தியதில் 36 ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வெங்கட்ராமணாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.