திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரூ.600-க்காக மகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை; தூக்கத்திலேயே பறிபோன உயிர்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோட்வாலி மாவட்டத்தில் வசித்து வருபவர் பூர்தி குப்தா (வயது 40). இவரின் தந்தை சஞ்சய் குப்தா. இவர்கள் இருவரும் அவ்வப்போது வாய்தகராறில் ஈடுபட்டுக்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தந்தை சஞ்சய்க்கு பூர்தி ரூ.600 பணம் கொடுத்துள்ளார். இந்த பணத்தை நேற்று பூர்தி திரும்ப வழங்குமாறு கேட்டு இருக்கிறார்.
பணம் கொடுக்கல் வாங்கலில் நடந்த சோகம்
பணத்தை திரும்ப வழங்க சஞ்சய் குப்தா மறுப்பு தெரிவிக்கவே, தந்தை - மகள் இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆத்திரத்தில் சஞ்சய், தனது மகளை கொலை செய்யும் எண்ணத்திற்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு வற்புறுத்திய தந்தையை கொலை செய்த மகள்? அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பணிஓய்வு வயதில் நடந்த கொடூரம்.!
உறங்கிக்கொண்டு இருந்த தனது மகளை, அவரின் உறக்கத்தின்போதே கழுத்தறுத்து கொலை செய்த தந்தை பின் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்
தகவலை அறிந்து வந்த காவல் துறையினர், சஞ்சயை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பூர்தி குப்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: நிலத்தகராறில் விவசாயி கண்மூடித்தனமாக அடித்துக்கொலை; நெஞ்சை ரணமாக்கும் காணொளி..!