மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமண ஊர்வலத்தில் கரிக்கட்டையான மணமகன்; ஆவலுடன் காத்திருந்த மணப்பெண்ணுக்கு தீயாய் சென்ற துக்க செய்தி.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டம், படுகோன், பரிசா பகுதியில் திருமண ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் காரில் மணமகன் மற்றும் அவரின் உறவினர்கள் வந்துகொண்டு இருந்த நிலையில், கார் - லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
கார் - லாரி மோதல்
இந்த விபத்தில் கார் முற்றிலும் தீப்பிடித்து இருந்ததில், மணமகன் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயத்துடன் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். நள்ளிரவு 12 மணியளவில் மணமகனின் வருகைக்காக மணப்பெண் காத்திருந்த சூழலில், அவர்களுக்கு மணமகனின் இறப்பு செய்தி தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மேகியுடன் அரிசி சாதம் சாப்பிட்டதால் சோகம்; உணவு விஷமாக மாறி சிறுவன் பலி..!
4 பேர் பலி:
கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் மணமகன் ஆகாஷ் அஃரிவார் (25), அவரின் மூத்த சகோதரர் ஆஷிஷ் அஃரிவார் (30), ஆஷிஷின் மகன் மயங்க் (4), கார் ஓட்டுநர் ஜெய் கரண் பகத் (32) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிஎன்ஜி டேங்க் வெடித்து சிதறியதால் உயிர்பலி ஏற்பட்டது.
லாரி ஓட்டுனருக்கு வலைவீச்சு
விபத்து ஏற்பட்ட அடுத்த கணமே உறவினர்கள் ரவி மற்றும் ரமேஷ் ஆகிய உறவினர்களை மீட்டுள்ளனர். பிறரை மீட்பதற்குள் நொடியில் விபத்து நடந்து முடிந்துள்ளது. இந்த விஷயம் தொடபிராக படுகோன் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண் உதவியுடன் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. கட்டிப்போட்டு தப்பியோடிய காமுகன்கள்.!