"காட்டுயானைக்கு காதல் வந்தல்லோ" - பெண்ணை பார்த்ததும் பின்வாங்கிய யானை.. நெட்டிசன்கள் கலாய்.!



a-elephant-step-backward-while-they-see-scooty-girl

காடுகளில் ராஜபோல வலம்வரும் யானைகள், எப்போதும் கூட்டமாக நகரும் தன்மை கொண்டவை ஆகும். கூட்டமாக சுற்றும் யானைகள், உணவு தேடி ஒவ்வொரு பருவக்காலத்தை கருத்தில்கொண்டு இடம்பெயரும்.

கேரளா போன்ற மாநிலங்களில் யானை அங்குள்ள மக்களின் வாழ்வில் அங்கமாக கவனிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மலைப்பகுதிகள், கோவில்களில் யானை இருக்கும். அதனை கோவில் நிர்வாகம் அரசுடன் இணைந்து பராமரித்து வருகிறது.

இதையும் படிங்க: வெயில் இல்லாம அப்பளமா.?! ரேஷன் அரிசியில் அசத்தலாக செய்வது எப்படி.?!

நெட்டிசன்கள் கலாய்

இந்நிலையில் ஆக்ரோஷமாக வந்த யானை ஒன்று, ஸ்கூட்டியில் இருந்த பெண்ணை பார்த்ததும் அமைதியாக பின்வாங்கி சென்றது. இது சம்பந்தமான வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலரும் யானையின் செயல்பாடுகளை கலாய்த்து, காட்டு யானைக்கு காதல் வந்த தருணம் என கமென்ட் செய்து வருகின்றனர்.   

யானை பெண்ணை பார்த்ததும் பின்வாங்கிய காரணத்தால், யானை பெண்ணின் மீது காதல் வயப்பட்டதாகவும், பெண் ஸ்கூட்டியுடன் இருப்பதால், அவரிடம் கவனமாக இருக்க வேண்டும் என பின்வாங்கி சென்றுள்ளதாகவும் கலாய்கின்றனர். அந்த வீடியோ உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இனிப்பு, ஆனால், திகட்டாத.. அவல் பாயாசம்.. சட்டுனு ரெடி பன்னி, அசத்தலாம் வாங்க.!