"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
வெயில் இல்லாம அப்பளமா.?! ரேஷன் அரிசியில் அசத்தலாக செய்வது எப்படி.?!
அப்பளம் செய்வதற்கு இனி சிரமப்பட தேவையில்லை. ரேஷன் கடை பச்சரிசியில் மொறு மொறுவென அப்பளம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையானப் பொருட்கள் :
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காய தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி - 1 கப்
தண்ணீர் - தேவையான அளவு
சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை நன்றாக கழுவி விட்டு குறைத்தது 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, பச்சரிசி நன்றாக ஊறியதும் ஒரு மிக்ஸி கப்பில் 1 டேபிள்ஸ்பூன் உப்பு மற்றும் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: இனிப்பு, ஆனால், திகட்டாத.. அவல் பாயாசம்.. சட்டுனு ரெடி பன்னி, அசத்தலாம் வாங்க.!
இப்போது, இதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின் படி சீரகம், சில்லி ஃப்ளேக்ஸ், பெருங்காய தூள் சேர்த்து நன்றாக கலந்து ஆப்பம் செய்யும் மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த பாத்திரத்தின் மேல் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியை கட்டிக்கொள்ள வேண்டும். இப்போது, அடுப்பை பற்ற வைக்க வேண்டும். பிறகு, கலந்து வைத்துள்ள மாவை ஒரு கப் எடுத்து அந்த வெள்ளைத் துணியில் ஊற்றி வட்ட வடிவில் பரப்பி வேக விடவும். இவ்வாறு மாவு முற்றிலும் ஒரு ஒரு அப்பளமாக ஊற்றி வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.
இந்த அப்பளத்தை எல்லாம் மின்விசிறியில் 2 நாள் காய வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு, அதை எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறு மொறு ரேஷன் அரிசி அப்பளம் தயார்.
இதையும் படிங்க: மழைக்கு இதமாக சூடான, சுவையான மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ்.. டக்குனு செய்யலாம்.. ரெசிபி இதோ..!