திரைப்பிரபலங்களின் விவாகரத்து; நடிகை சினேகா - பிரசன்னா நச் பதில்.!
மழைக்கு நடுவே குட்டியுடன் அடைக்கலம் தேடிய நாய்; வைரலாகும் மனம் நெகிழவைக்கும் வீடியோ.!
புயல் மழைக்கு நடுவே தாய்-குழந்தையாக நாய் உதவிகேட்டு வந்த நெகிழ்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி மாநகரை வெள்ளத்தில் தத்தளிக்க வைத்து, அதன் நெருங்கிய பகுதிகளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களையும் புரட்டியெடுத்தது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கிப்போயுள்ளது.
உதவி கேட்டு வந்த நாய்
இந்நிலையில், தாய் நாய் ஒன்று தனது குட்டி நாயுடன் சேர்ந்து மழைக்கு ஓரமாக ஒதுங்க இடம்தேடி அலைந்தது. அப்போது, ஒருவர் தனது வீட்டின் வாசலை திறந்து வைத்திருந்ததைப்பார்த்து, தாய் நாய் அங்கு வந்து வாலை ஆட்டியபடி உதவி கேட்டது.
இதையும் படிங்க: இப்படி ஒரு மாண்புமிகு முதலாளியா? பெஞ்சல் புயலும், விடுமுறையும்.. வைரலாகும் உரையாடல்.!
நெகிழ்ச்சி வீடியோ வைரல்
அதனுடன் வந்த குட்டி நாயோ, காருக்கு அடியில் இருந்த சிறிய இடைவெளியில் சென்று அமைதியாக அமர்ந்துகொண்டது. இந்த நெஞ்சை நெகிழவைக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இப்படி ஒரு மாண்புமிகு முதலாளியா? பெஞ்சல் புயலும், விடுமுறையும்.. வைரலாகும் உரையாடல்.!