திருமணம் முடிந்த 2 ஆண்டுகளில் உயிரை மாய்த்த சீரியல் நடிகை; சோகத்தில் ரசிகர்கள்.!
இப்படி ஒரு மாண்புமிகு முதலாளியா? பெஞ்சல் புயலும், விடுமுறையும்.. வைரலாகும் உரையாடல்.!
வங்கக்கடல் பகுதியில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெஞ்சல் புயலாக மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, மரக்காணம் - புதுச்சேரி நடுவே கரையை கடந்தது. இந்த புயலின் காரணமாக நேற்று சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியது.
புயல் கரையை கடந்தபின்னரும் பெய்த மழை காரணமாக, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகள் கடும் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளன. சங்கராபரணி, கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் கடலூர், புதுவை நகரங்களை நீரில் தத்தளிக்க வைத்துள்ளது.
புதுச்சேரியில் இராணுவம் களமிறங்கி மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரண்மாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் விடுமுறை வழங்கப்பட்டன. ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டனர். ஒருசில நிறுவனங்கள் தொடர்ந்து மழையிலும் இயங்கியது.
இதையும் படிங்க: "காட்டுயானைக்கு காதல் வந்தல்லோ" - பெண்ணை பார்த்ததும் பின்வாங்கிய யானை.. நெட்டிசன்கள் கலாய்.!
இதனால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் அதிருப்தியடைந்தாலும், வேறு வழியின்றி பணியை கவனித்தனர். இதனிடையே, ஒரு நிறுவனத்தின் முதலாளி, புயல் காரணமாக தனது நிறுவனத்திற்கு விடுமுறை வழங்கியதன் உரையாடல் ஒன்று முகநூலில் வைரலாகி வருகிறது.
அந்த உரையாடலில்..
"Sir நல்ல மழை வருது sir, நாளைக்கு லீவ் தான sir?
ஆமாம் லீவ் தான். எல்லா employees கும் inform பண்ணிடுங்க " என்று சொல்லிவிட்டு போனை கீழே வைத்தேன்.
இன்னும் நீ மாறவே இல்லடா என்றார்கள் அம்மா. ஏன் மா இப்டி சொல்ற?
ஸ்கூல் போகும்போது தான் லீவ் விடுவாங்கனு ஜன்னல் வழியா மழை வருதா , மழை வருதானு பாத்துனு இருப்ப ....
இப்போ உன் company la வேலை செய்றவங்களுகு மழை வந்தாலே லீவ் விட்டுடுற.... எல்லா ஆபீஸ் உம் இப்படியா லீவ் விடுறாங்க ? என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.
இல்லமா, யோசிச்சி பாரேன்...நான் ஒரு company la வேலை பாக்குறேன் வைங்க, நல்ல மழை வரும்போது , ஷூ போட்டுகிட்டு, phone a pocket la வச்சிகிட்டு , ரைன்கோட் போட்டுகிட்டு, மழை, ஈரம் சொத சொதனு டிரஸ் இருக்கும்போது uncomfortable a இருக்கும்போது வேலை செய்ய போக எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். நா அப்டி கஷ்டபட்டு போகிறத பாக்க உங்களுக்கும் கஷ்டமாக இருக்கும்.
அப்படிதானா? என்றேன்.
ஆமா என்றார்கள் அம்மா.
அதே மாதிரி தான் நம்ம staffs கும், அவங்க parents கும் இருக்கும் . எனக்கு எப்படி பட்ட கம்பனி ல வேலை செய்ய பிடிக்குமோ ,
அப்படி பட்ட ஒரு company ஆக என்னோட company என் employees கு இருக்கணும்னு நினைக்கிறேன் என்றேன்.
சரி தான்பா , இப்படியே இரு , மாரிடாதடா ! என சொல்லிவிட்டு மகிழ்ச்சியாக சென்றார் அம்மா.
அம்மா சென்ற பின்பு, ஒரு 90's kid ஆகிய எனது நிறுவனம் எப்படி இருக்கிறது என நினைத்து பார்கிறேன்....
சனி, ஞாயிறு விடுமுறை
அரசு விடுமுறை நாட்கள் விடுமுறை
தீபாவளி, பொங்கல் நாட்களுக்கு முந்தைய , அடுத்த நாட்கள் விடுமுறை
மழை பெய்தால் சீக்கிரம் 2pm-3pm மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பி விடலாம்.
இரவு முழுவதும் மழை, காலை 9 வரை மழை என்றால் அன்று அலுவலம் விடுமுறை
Bizz எக்ஸ்போ பார்க்க செல்ல வேண்டும் என்றால் விடுமுறை,
காலை 10 மணி முதல் மாலை 6.30 வரை மட்டுமே பணி நேரம்
மாத மாதம் 5 ஆம் தேதி salary,
சனி, ஞாயிறு இல்லாமல் தேவை எனில், மாதம் 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை எடுத்து கொள்ளலாம்,
அலுவலக வேலை முடித்து விட்டால் அலுவலக projector இல் கிரிக்கெட், Netflix பார்க்கலாம்.
சிறப்பு நாட்கள், payment நாட்களில் அலுவலகத்தில் பிரியாணி, refreshments,
எனது கார் , புல்லட் அனைத்தையும் ஊழியர்கள் பயன்படுத்தலாம்,
அலுவலகத்தில் நுழையும் பொது good morning sir சொல்ல, எழுந்து நிற்க தேவை இல்லை,
பெரும்பாலும் நான் வருவதை கூட அவர்கள் பொருட்படுத்துவது இல்லை,
இவ்வாரகவே எனது நிறுவனம் இப்போது வரை இயங்கி வருகிறது.
குறிப்பு - இவ்வளவு இருக்கும் போதும் அவசியம் இன்றி ஊழியர்கள் விடுமுறை எடுப்பது இல்லை.
மேலும் புதிய ஆராய்ச்சிகள், தொழில் சார் சந்திப்புகள் , சித்தாந்த பயணங்கள் என நான் இருப்பதால் மாதத்தில் 3 லிருந்து 5 நாட்கள் மட்டுமே அலுவலகத்திற்கு செல்வேன்.
ஆனாலும் எனது presence இல்லாமலே ஊழியர்கள் அவர்களுக்கான பொறுப்புகளை உணர்ந்து, வேலைகளை முடித்து லாபத்துடன் நிறுவனத்தை இயங்கவைக்கின்றனர்.
வேலை நேரத்தை கூட்டுவதாலோ, கண்டிப்புடன் இருப்பதாலோ மட்டுமே ஒரு நிறுவனம் லாபம் ஈட்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஊழியர்களுக்கு அளிக்கும் சுதந்திரம் , அவர்கள் மீதான நம்பிக்கை , அவர்களுக்கு அளிக்கும் வசதிகள் மட்டுமே அவர்களின் செயல்திறனை மேம்படுத்தும், லாபத்துடன் இயங்க வைக்கும் என தீர்க்கமாக நம்புகிறேன்.
லாபம் என்பதை தாண்டி , ஒரு தொழில் எனக்கு எவ்வளவு மன நிறைவை தருகிறது, என் தொழிலை எவ்வளவு மகிழ்வுடன் என்னால் செய்ய முடிகிறது, எவ்வளவு நபர்களை மகிழ்வாக வைத்துகொள்ள முடிறது என்பது என்னை தினமும் புதுப்பிக்கிறது
இன்று மழைக்கால விடுமுறையில் உள்ள அனைத்து 90's கிட் களுக்கும் வாழ்த்துக்கள் படித்ததில் பிடித்தது"
- என தெரிவிக்கப்ட்டுள்ளது.
இலாபம், நிறுவனத்தின் வளர்ச்சி என பல விஷயங்களை தாண்டி, ஊழியர்களின் பாதுகாப்புக்கு இன்றளவில் பெரும்பாலான நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிப்பது இல்லை. அதனை கருத்தில் கொண்டும் நிறுவனங்கள் செயல்பட்டால் நலமே என்பது பலரின் எதிர்பார்ப்பு.
இதையும் படிங்க: "காட்டுயானைக்கு காதல் வந்தல்லோ" - பெண்ணை பார்த்ததும் பின்வாங்கிய யானை.. நெட்டிசன்கள் கலாய்.!