#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாய் வீட்டு, சீக்ரெட் மசாலா.. இதுல ஒரு ஸ்பூன் சேர்த்தால் உங்க பிரியாணியும் பிரமாதம் தான்.!
பிரியாணி அனைவருக்கும் பிடித்த உணவு. அசைவத்தில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, பிரான் பிரியாணி எனவும், சைவத்தில் பன்னீர் பிரியாணி, வெஜ்டெபிள் பிரியாணி, காளான் பிரியாணி என பல விதமான பிரியாணி வகைகள் உண்டு. அதுவும், பாய் வீட்டு பிரியாணிக்கு தனி சுவை உண்டு. இதனை பலரும் விரும்புவார்கள். அப்படி அந்த பிரியாணியில் என்ன தான் சேர்க்கப் படுகிறது என எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி இருக்கும். அதற்கான பதில் அவர்கள் சேர்க்கும் மசாலாப் பொடியில் தான் உள்ளது. அந்த மசாலாப் பொடியை எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
தனியா - 100 கிராம்
சோம்பு - 25 கிராம்
மிளகு - 25 கிராம்
சுருள் பட்டை - 25 கிராம்
சாய் சீரகம் - 25 கிராம்
கிராம்பு - 15 கிராம்
ஜாதிக்காய் - 3 ( 3 காய் மட்டும் நுணுக்கியது )
அண்ணாச்சி பூ - 25 கிராம்
ஏலக்காய் - 15 கிராம்
ஜாதி பத்திரி - 5 கிராம்
மராட்டி மொக்கு - 25 கிராம்
பிரியாணி இலை - 15 கிராம்
காய்ந்த ரோஜா இதழ் - 25 கிராம்
கல்ப்பாசி - 10 கிராம்
பெரிய ஏலக்காய் - 10 கிராம்
செய்முறை :
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து தீயை மிதமான அளவில் வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயை வைத்து சூடானதும் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின் படி தனியா, சோம்பு, மிளகு, சுருள் பட்டை, சாய் சீரகம், கிராம்பு, ஜாதிக்காய் (நுணுக்கியது ), அண்ணாச்சி பூ, ஏலக்காய், ஜாதி பத்திரி, மராட்டி மொக்கு, பிரியாணி இலை, காய்ந்த ரோஜா இதழ், கல்ப்பாசி, பெரிய ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியாக போட்டு 2 நிமிடம் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: உங்களுக்கு துரோகம் நடக்க போவதை உணர்த்தும் அறிகுறிகள்..! கவனித்தால் தப்பிக்கலாம்.!
பிறகு, சூடு ஆற வைத்து ஒரு மிக்சி கப்பில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது, நல்ல வாசனையான பிரியாணி மசாலாப் பொடி தயார். இதை ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு :
இந்த மசாலாப் பொடியை பிரியாணி செய்யும் போது ஒரு தேக்கரண்டி சேர்த்து செய்து பாருங்கள் மிகவும் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். மேலும், இந்த மசாலாப் பொடியை அசைவம் மற்றும் சால்னா செய்யும் போது 1/2 தேக்கரண்டி சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.