"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
உங்களுக்கு துரோகம் நடக்க போவதை உணர்த்தும் அறிகுறிகள்..! கவனித்தால் தப்பிக்கலாம்.!
காதல் மற்றும் நம்பிக்கையை அழிக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய சக்தி வாய்ந்தது துரோகம் என்ற செயல். உங்கள் உறவில் இருந்த அனைத்து மகிழ்ச்சியையும் இது கெடுத்து விடக்கூடும். உறவில் இது மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும். இந்த துரோகம் செய்ய ஒரு நபருக்கு எந்த இடத்தில் தோன்றும் என்பது பற்றி இங்கு ஆராயலாம்.
இதற்கு ஆண், பெண் என்றெல்லாம் வித்தியாசம் இல்லை. பொதுவாக உறவில் இருக்கும் ஒரு நபர் தன் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள், உறவின் தன்மை, அதிகார பண்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு துரோகம் செய்ய தூண்டப்படுகிறார். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் உறவுகளிடையே துரோகம் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து அலசப்பட்டதில் சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது. அது பற்றி பார்க்கலாம்.
இதையும் படிங்க: குட்டீஸ்களை வெஜிடபிள் சாப்பிட வைக்கணுமா.?! இதை முயற்சி செய்யுங்கள்.!
தாம்பத்திய
உறவு மட்டும் காரணமில்லை :
ஒரு உறவில் திருப்தி கிடைக்காமல் இருக்கும் நபர்கள் விரைவில் துரோகம் செய்ய தூண்டப்படலாம். இந்த திருப்தி என்பது தாம்பத்தியத்தை மட்டும் பொறுத்தது அல்ல. உங்கள் உறவிற்கு நடுவில் ஏற்படும் ஏதாவது ஒரு சங்கடம், அல்லது தனது உழைப்பு சுரண்டப்படுவதாக உணர்ந்தாலோ, அல்லது தான் இந்த உறவில் இருப்பதற்கு பெரிதாக எதுவும் அர்த்தம் இல்லை என்று அவர்களுக்கு தோன்றினாலோ அது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும். உணர்வு ரீதியான ஆதரவு, பரிசுப் பொருட்கள், உறவருக்கென ஒதுக்கப்படும் நேரம் உள்ளிட்ட விஷயங்கள் அவருக்கு கிடைக்கவில்லை எனில் அவர் அதிருப்தியுடன் காணப்படுவார். இப்படிப்பட்டவர்கள் துரோகம் செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கான அதிருப்தியை அவர்கள் பல்வேறு சூழல்களில் வெளிப்படுத்துவார்கள். அதை நாம் கவனித்து உறவில் கையாளவில்லை என்றால் இந்த உறவிலிருந்து வெளியேறி வேறொரு சூழலில் அவர்கள் துரோகத்தில் ஈடுபடலாம்.
எல்லையற்ற
மனிதர்கள் :
தனது துணையின் அன்பு மற்றும் ஆதரவு சரிவர கிடைக்காமல் அதிருப்தியுடன் காணப்படும் நபர்கள் துரோகம் செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆண் பெண் யாராக இருந்தாலுமே சில விஷயங்களில் அவரவருக்கான எல்லைகள் கொண்டிருக்க வேண்டும். அதில் உறுதியுடனும் அவர்கள் இருக்க வேண்டும். எந்தவிதமான எல்லைகளும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக வாழும் நபர்கள் எப்போது வேண்டுமானாலும் துரோகத்தில் ஈடுபடலாம். அவ்வளவு ஏன் அதை அவர்கள் துரோகமாக கூட நினைக்க மாட்டார்கள். மேலும், உறவில் மற்றொரு நபரின் உணர்வுகள் குறித்த எந்தவித மான பொறுப்புகளும், அக்கறையும் இல்லாமல் இருந்தால், அவர்கள் விரைவில் துரோகம் செய்யக்கூடும்.
ஏற்கனவே
துரோகம் செய்தவர்கள் :
ஒருவரை ஏமாற்றுவது என்பது தற்செயலாக நடக்கக்கூடிய விஷயம் கிடையாது. அது விருப்பத்துடன் தான் நடைபெறுகிறது. எனவே, ஏற்கனவே துரோகம் செய்த நபர்களுக்கு மீண்டும் துரோகம் செய்வது என்பது மிகவும் எளிதானதாக தான் இருக்கும். ஏற்கனவே, துரோகம் செய்த நபர்களுக்கு அதற்குண்டான எந்த விளைவுகளும் ஏற்படவில்லை என்றால் அவர்கள் மீண்டும் அது போன்ற ஒரு துரோகத்தை யோசிக்காமல் செய்து விடுவார்கள்.
திரில்லிங்
விரும்பிகள் :
வாழ்க்கையில் அதிகப்படியான விறுவிறுப்பு மற்றும் சுவாரசியம் வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்மை காதல் அல்லது திருமண வாழ்க்கையை தாண்டி ஒரு உறவை வைத்துக் கொள்வதை விறுவிறுப்பான நடவடிக்கையாக நினைப்பார்கள். எனவே அப்படிப்பட்ட திரில்லிங் விஷயங்களுக்காக அவர்கள் இதை செய்யலாம். தாம்பத்திய உறவில் வித்தியாசமான எண்ணங்கள் மற்றும் ஆசைகளை கொண்டிருக்கும் நபர்கள் தங்கள் துணையுடன் அது நடக்காத பட்சத்தில் அதை வேறொரு நபர் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று துடிப்பார்கள். அவர்கள் இதற்காக துரோகம் செய்யக்கூடும்.
இதையும் படிங்க: உயரத்தை அதிகரிக்கச் செய்யும்.. 5 உணவுகள்.. ஒரே மாதத்தில் கண்கூடாக வளர்ச்சியை காணலாம்.!