விருப்ப உணவாக மாறிய பிரியாணி.. உங்க ஊரில் எப்படி?..!
தென்னிந்தியர்களின் விருப்ப உணவாக மாறியுள்ள பிரியாணிக்கு, வறுத்த என்பது பாரசீக சொல் ஆகும். பிரியாணி சமைக்கும் முறையானது பாரசீகத்தில் தொடங்கி, பின் வணிகர்கள் வாயிலாக தெற்காசியாவுக்கு பரவியது. இந்தியாவை பொறுத்தமட்டில் பிரியாணி சமைக்கும் முறை, அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களின் விருப்பத்திற்கேற்ப பின்னாளில் மாற்றம் செய்யப்பட்டது.
பிரியாணியின் வகைகள்
அந்த வகையில் ஹைதராபாத் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி, காஷ்மீரி பிரியாணி, பாம்பே பிரியாணி, லக்கணவி பிரியாணி என பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் தத்தை பொறுத்தமட்டில் பாசுமதி அரிசி கொண்டு தயாரிக்கப்படும் ஆம்பூர் பிரியாணி, பாய் வீட்டு பிரியாணி, சீராக சம்பா அரிசி கொண்டு தயாரிக்கப்படும் திண்டுக்கல் பிரியாணி பிரபலமானவை ஆகும்.
இதையும் படிங்க: தலைக்கு எண்ணெய் வைக்க போறிங்களா.? இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க.!
கொரோனாவுக்கு பின் மிகப்பெரிய தாக்கம்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலான உணவகங்களில் மதியம் சாப்பாடு, புரோட்டா போன்றவை மிகப்பெரிய இடத்தை தக்கவைத்து இருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக, குறிப்பாக கொரோனாவுக்கு முன்பு பிரியாணியின் மீதான மோகம் அதிகரித்து, கொரோனாவுக்கு பின் மிகப்பெரிய தாக்கத்தையும் உண்டாக்கிவிட்டது.
இரவு வரை கிடைக்கும் பிரியாணி
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரியாணிக்கு என சில கடைகள் இருந்தாலும், தரம் என்பது நிரந்தரமாக இருந்தது. ஆனால், இன்றளவில் திரும்பும் இடமெல்லாம் காலை 11 மணியில் தொடங்கி இரவு வரை கிடைக்கும் பிரியாணியின் தரம் என்பது முன்பைப்போல அல்லாமல் வணிக மயமாகிவிட்டது.
அரிசி சாதம் - சாப்பாடு வித்தியாசம்
ஒரு சாப்பாடு ரூ.60 க்கு விற்பனை செய்த காலங்களில் கூட்டு, பொரியல், அவியல், அப்பளம், 4 வகை குழம்பு என இருந்தது. ஆனால், இன்றளவில் ரூ.100 முதல் ரூ.300 க்கும் மேல் கொடுத்து வாங்கப்படும் பிரியாணிக்கு வெங்காயம், கத்தரிக்காய் குழம்பு கூட பற்றாக்குறையாக இருக்கிறது.
தென்னிந்தியர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பெற்ற பிரியாணி, உங்களின் பகுதியில் தரத்துடன் கிடைக்கிறதா என்பதை முடிந்தால் கருத்தில் சொல்லிவிட்டு போங்க.
இதையும் படிங்க: டீக்கடை ஸ்டைலில் சுவையான பஜ்ஜி.. மழைக்கு இதமா வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.! செய்முறை உள்ளே.!