மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைக்கு எண்ணெய் வைக்க போறிங்களா.? இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க.!
பொதுவாக நமது முடிக்கு எண்ணெய் வைப்பது அவசியம் தான் என்றாலும், இதுபோல எண்ணெய் தலைக்கு வைக்கும் போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நிறைய பெண்கள் முடியில் இருக்கும் சிக்கல்களை நீக்க தலையில் எண்ணெய் வைத்துவிட்டு உடனடியாக சீப்பை வைத்து தலை பிரஷ் செய்வார்கள். இது மிகப்பெரிய தவறு. தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்த பின்பு உடனே தலையில் சீப்பை வைத்து சீவும் போது நமது கூந்தல் உடையும். முடி உதிர்வையும் ஏற்படுத்தும்.
இரவு முழுதும் எண்ணெய்
பலர் இரவு நேரங்களில் தலையில் எண்ணெய் வைத்துவிட்டு பின்னர் காலையில் எழுந்தவுடன் தலைக்கு குளிப்பார்கள். இது மிகப்பெரிய தவறு. இதை பலரும் செய்து கொண்டு இருப்பார்கள். இரவு முழுவதும் தலையில் எண்ணெய் வைப்பதால் முடி பிசுபிசுப்பு தன்மைக்கு ஆளாகும்.
இதையும் படிங்க: ஷாக்கிங்.!! மறந்தும் பிரஷர் குக்கரில் வைத்து சமைக்க கூடாத உணவுகள்.!!
மேலும் நமது தலையணை மற்றும் படுக்கை உள்ளிட்ட இடங்களில் அழுக்குகளை சேர்க்கும். இதனால் தொற்று ஏற்படலாம். அதிக நேரம் முடியில் எண்ணெய் இருப்பதால் இது முடியில் இருக்கும் இயற்கையான எண்ணெய் பசையை பாதிக்கும்.
ஈரமுடியில் எண்ணெய்
ஈரமாக இருக்கும் போது தலையில் எண்ணெய் வைப்பது பலருக்கும் இருக்கும் பழக்கம். இதுபோல செய்வதால் முடி உதிர்வு ஏற்படும். முடியை நன்றாக காய வைத்துவிட்டு, அதன் பின்னர் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும்.
அதிகப்படியான எண்ணெய்
எண்ணெய் முடிக்கு நன்மை தான் என்றாலும் அதிகப்படியான எண்ணெய் வைப்பது நல்லது இல்லை. இவ்வாறு அதிகப்படியான எண்ணெய் பயன்படுத்தும் போது தலையில் அழுக்கு சேர்வதுடன் அதை விடுவிக்க நிறைய ஷாம்புவை பயன்படுத்த வேண்டி இருக்கும். இதனால் முடி உதிர்வு ஏற்படும்.
முடியை அதிகப்படியாக இறுக்கமாக கட்டக்கூடாது. இதனால் மயிர் கால்கள் பாதிக்கப்பட்டு உடைந்து விடும். எப்போதும் கொஞ்சம் தளர்வாக முடியை கட்டுவது முடி பாதிக்காமல் இருப்பதுடன் முடி உதிர்விலிருந்து தப்பிக்க உதவும்.
இதையும் படிங்க: Yummy... நார்த் இந்தியன் ஸ்டைல் பட்டர் காளான் மசாலா.!! சிம்பிள் ரெசிபி.!!