COOKING TIPS : உணவின் சுவையை அதிகரிக்க இந்த 10 குறிப்புகளை ட்ரை பண்ணி பாருங்க.!?



Cooking tips for bachelor and working womens

வீட்டில் சமைத்து உண்ணும் ஆரோக்கிய உணவுகளின் குறிப்புகள்

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலருக்கும் வீட்டில் சமைத்து உண்ணும் உணவுகள் சாப்பிட பிடிப்பதில்லை. ஆனால் கடைகளில் வாங்கி உண்ணும் உணவுகளை விட வீட்டில் சமைத்து சாப்பிடும் உணவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளை அடிக்கடி உண்டு வந்தால் பலவிதமான நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

foods

இதற்கு மாற்றாக வீட்டில் சமைத்து உண்ணும் உணவுகளை சுவையாக செய்து சாப்பிடலாம். இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, மருத்துவமனைக்கு செலவு செய்வதையும் தவிர்க்கலாம். இவ்வாறு வீட்டிலேயே சுவையான உணவை சமைப்பதற்கு இந்த 10 குறிப்புகளை ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிங்க: புடலங்காயை 12 நாட்களுக்கு தொடர்ந்து இப்படி சாப்பிட்டு பாருங்க.! இவ்வளவு நோய்களை குணப்படுத்துமா.!?

பயனுள்ள 10 சமையல் குறிப்புகள்

1. குக்கரில் பருப்பை வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொண்டால் பருப்பின் சுவை அதிகரிப்பதோடு, குக்கரில் பொங்கி வராமல் இருக்கும்.
2. இஞ்சி, பூண்டு பேஸ்ட் வீட்டிலேயே ஒரு சிலர் தயாரித்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் இஞ்சி, பூண்டு பேஸ்ட் செய்யும் போது சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருப்பதோடு சுவையும், மனமும் அதிகமாக இருக்கும்.
3. உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது உருளைக்கிழங்கில் ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு மாவை சேர்த்து தடவி பொரித்து எடுத்தால் உருளைக்கிழங்கு சிப்ஸ் மொறு மொறுப்பாக இருக்கும்.

foods

4. வீட்டில் தயாரித்த தயிர் மிகவும் புளிப்பாக இருந்தால் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்வதன் மூலம் புளிப்பு சுவையை குறைக்கும்.

5. வீட்டில் எண்ணெய் பலகாரங்களான வடை, பூரி, முறுக்கு போன்றவை செய்தால் அவை எண்ணெயை அதிகமாக உறிஞ்சாமல் இருப்பதற்கு எண்ணெயில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
6. தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம், தக்காளி சாதம் போன்ற கலவை சாதங்கள் செய்யும்போது இதில் ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலையை வறுத்து பொடி செய்து தூவினால் சாதம் சுவையாக இருக்கும்.
7. பொரியல் செய்யும்போது அல்லது காய்கறிகளை வதக்கும்போது அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கினால் பாத்திரம் அடி பிடிக்காமல் குறைந்த எண்ணெய்யில் வெந்துவிடும்.
8. இட்லி அதிகமாக மீந்துவிட்டால் பொடியாக உதிர்த்து ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
9. அடிக்கடி அப்பளம் விரும்பி சாப்பிடும் நபர்களாக இருந்தால் அப்பளத்தை பொறித்து காற்று புகாத ஜாடி அல்லது பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் நமத்து போகமால் இருக்கும்.
10. தேங்காயை உடைத்து சிறிது பயன்படுத்திவிட்டு மீதம் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு தண்ணீரில் போட்டு வைத்தால் சில நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

இதையும் படிங்க: புடலங்காயை 12 நாட்களுக்கு தொடர்ந்து இப்படி சாப்பிட்டு பாருங்க.! இவ்வளவு நோய்களை குணப்படுத்துமா.!?