புடலங்காயை 12 நாட்களுக்கு தொடர்ந்து இப்படி சாப்பிட்டு பாருங்க.! இவ்வளவு நோய்களை குணப்படுத்துமா.!?



Benefits of eating snake gourd

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புடலங்காய்

பொதுவாக நம் அன்றாடம் வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அறிந்ததே. இதில் புடலங்காய் பலரது வீடுகளிலும் அடிக்கடி சமைத்து சாப்பிடும் காயாக இருந்து வருகிறது. ஆனாலும் இந்த புடலங்காய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சாப்பிட விரும்புவதில்லை. மேலும் இந்த புடலங்காயில் தலை முதல் கால் வரை ஏற்படும் பல வகையான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Snake gouard

புடலங்காய்

என்னென்ன நோய்களை குணப்படுத்தும்?

1. புடலங்காய் நீர் சத்து நிறைந்த காயாகும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
2. செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அடிக்கடி உணவில் புடலங்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3. குறிப்பாக குடல் புண்கள், அல்சர், குடல் சம்பந்தப்பட்ட நோய்களை எளிதில் குணமாக்குகிறது.
4. புடலங்காயை சாறு எடுத்த அதில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் எளிதில் நீங்கும்.
5. இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் தினமும் புடலங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள கொழுப்புகளை எளிதில் குறைக்க உதவுகிறது.

இதையும் படிங்க: மலச்சிக்கலை முற்றிலுமாக குணப்படுத்தும் மங்குஸ்தான்.. வேறு என்னென்ன நன்மைகள்.!?

Snake gouard

6. மேலும் சிறுநீரக பிரச்சனை, சிறுநீரக கல், சிறுநீரக தொற்று போன்ற நோய்கள் இருப்பவர்கள் புடலங்காயை சாறு எடுத்து குடித்து வருவதன் மூலம் நோய் முற்றிலுமாக குணமடையும்.

7. மஞ்சள் காமாலை நோய்க்கு புடலங்காய் இலை அருமருந்தாக இருந்து வருகிறது.
8. இதய நோய் உள்ளவர்கள் புடலங்காய் இலையை அரைத்து சாறு எடுத்து 48 நாட்களுக்கு குடித்து வர இதய நோய் குணமடைகிறது.
9. புடலங்காய் சாறு ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்து தூக்கமின்மையை போக்குகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய புடலங்காயை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

இதையும் படிங்க: நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் டீடாக்ஸ் பானம்.. எப்படி செய்யலாம்.!?