Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆப்ரிக்காட் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!?
தினமும் காலையில் வெறும் வயிற்றில் எழுந்தவுடன் பல் துலக்கியதும் 8 உலர்ந்த ஆப்பிரிக்காட் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. இது குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
உலர்ந்த ஆப்பிரிக்காட் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
1. செரிமான பிரச்சனை - உலர்ந்த ஆப்பிரிக்காட் பழங்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து, மலச்சிக்கல், பசியின்மை போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.
2. சரும பளபளப்பு - ஆப்பிரிக்காட் பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புது செல்களை வளர வைத்து சருமத்தை பளபளப்பாக இருக்கச் செய்கிறது. இதனால் தினமும் ஆப்பிரிக்காட் பழங்கள் சாப்பிடுவது தோலிற்கு பளபளப்பையும், மென்மையையும் தருகிறது.
3. உடல் எடை குறைப்பு - தினமும் ஆப்பிரிக்காட் பழங்களை சாப்பிடும் போது இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து அதிகமாக பசி எடுப்பதை கட்டுப்படுத்தி நாம் உட்கொள்ளும் உணவின் அளவை குறைக்கிறது. இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
4. இதய ஆரோக்கியம் - உலர்ந்த ஆப்பிரிக்கா பழங்களில் பொட்டாசியம் மற்றும் மினரல்கள் அதிகமாக இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
5. கண் ஆரோக்கியம் - உலர்ந்த ஆப்பிரிக்காட் பழங்கள் கண்களை கவரும் வண்ணம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இந்த நிறத்திற்கு காரணம் இதில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால் கண்களில் உள்ள பாதிப்புகளை சரி செய்து ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
இதையும் படிங்க: Tips :நறுக்கிய பழங்கள் நிறம் மாறாமல் பாதுகாக்க என்ன செய்யலாம்.!?
6. புத்துணர்ச்சியாக இருக்க செய்வது - உலர்ந்த ஆப்பிரிக்காட் பழங்களில் இயற்கையான சர்க்கரை, மினரல்கள், இரும்பு சத்து போன்றவை அதிகமாக இருப்பதால் இதை சாப்பிடும் போது உடலை புத்துணர்ச்சியாக இருக்க செய்கிறது.
7. எலும்பு ஆரோக்கியம் - எலும்புகளில் கால்சியசத்தை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக இருக்க செய்கிறது.
8. இரும்பு சத்து குறைபாடு - உலர்ந்த ஆப்பிரிக்காட் பழங்களில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் இதனை குழந்தைகள் முதல் கர்ப்பிணி பெண்கள் வயதானவர்கள் அதிகமாக சாப்பிட்டு வந்தால் நல்லது.
இதையும் படிங்க: Tips :நறுக்கிய பழங்கள் நிறம் மாறாமல் பாதுகாக்க என்ன செய்யலாம்.!?