லஞ்ச் பாக்ஸ்க்கு சுவையும் சத்தும் நிறைந்த தேங்காய் சாதம்.!! சிம்பிள் ரெசிபி.!!



healthy-and-tasty-coconut-rice-recipe

ஒரே மாதிரியான உணவு சாப்பிட்டு போர் அடிக்கிறதா.? கவலை வேண்டாம். சுவையும் சத்தும் நிறைந்த இந்தத் தேங்காய் சாதத்தை சமைத்து சாப்பிட்டு பாருங்கள். சுவையோடு உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கும். இதனை எளிமையாக எப்படி செய்வதென்று இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்

சமைத்த சோறு 2 கப், துருவிய தேங்காய் 1/2 கப், கடுகு 1 ஸ்பூன், உளுந்துபருப்பு 1/2 ஸ்பூன், கடலை பருப்பு 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், வர மிளகாய் 3, கருவேப்பிலை 2 கொத்து, பெருங்காயம் 1/4 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன் இவற்றுடன் தேவையான அளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

Healthy Food

செய்முறை

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி துருவிய தேங்காயை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது பாத்திரத்தில் மீண்டும் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது வடித்து வைத்த சாதத்தை இதில் சேர்த்து நன்றாக கிளறவும். இதனைத் தொடர்ந்து தனியாக வறுத்து வைத்த தேங்காயை இவற்றுடன் சேர்த்து சிறிது நேரம் கிளறி எடுத்தால் சுவையான தேங்காய் சாதம் தயார். இதனுடன் சிக்கன் அல்லது மட்டன் குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

இதையும் படிங்க: யம்மி... தித்திக்கும் கேரளா ஸ்டைல் நெய் அப்பம் செய்வது எப்படி.? சிம்பிள் ரெசிபி.!!

இதையும் படிங்க: யம்மி... சுவையான மின்ட் லஸ்ஸி வீட்டிலேயே செய்வது எப்படி.? எளிமையான ரெசிபி.!!