திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
யம்மி... சுவையான மின்ட் லஸ்ஸி வீட்டிலேயே செய்வது எப்படி.? எளிமையான ரெசிபி.!!
மின்ட் லஸ்ஸி கோடை வெயிலுக்கு இதமாகவும் புத்துணர்ச்சி தரக்கூடிய ஒரு பானமாகும்.ஒரு தடவை சூப்பரான புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய மின்ட் லஸ்ஸி செஞ்சு குடிச்சு பாருங்க. கண்டிப்பா குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இது சுவையோடு மட்டுமல்லாது சத்து நிறைந்தது. இதனை கடைகளில் குடிக்காமல் இந்த ரெசிபியை பின்பற்றி வீட்டில் செய்து குடித்துப் பாருங்கள். சுவையும் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 கட்டு புதினா இலைகள், 1 கப் கெட்டியான தயிர், 1/2 கப் சர்க்கரை, 1/4 டீஸ்பூன் சீரகத் தூள், 1 சிட்டிகை உப்பு.
செய்முறை
புதினாவை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். சீரகத்தை கழுவி கடாயில் சேர்த்து வறுத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் கெட்டியான தயிர், சீரகத்தூள், உப்பு, சர்க்கரை, புதினா இலைகள் அனைத்தையும் சேர்த்து நுரை பொங்க அடித்து எடுக்கவும். ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள் சேர்த்து நுரைத்து அடித்த தயிர் கலவையை சேர்த்தால் சுவையான மின்ட் லஸ்ஸி தயார்.
இதையும் படிங்க: வாவ்.. இது புதுசா இருக்கே.!! பருப்பு இல்லாமல் கமகமக்கும் சாம்பார்.!! சிம்பிள் ரெசிபி.!!
இதையும் படிங்க: வாவ்.. இது புதுசா இருக்கே.!! பருப்பு இல்லாமல் கமகமக்கும் சாம்பார்.!! சிம்பிள் ரெசிபி.!!