பயணத்தின் போது வாந்தியா.? அதை தடுக்க சூப்பர் டிப்ஸ் இதோ.!



how to control vomiting sense while travelling

பயணத்தின் போது அதிகப்படியானோருக்கு வாந்தி வருவது இயல்பானது. இப்படி பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். பயணம் செய்யும் முன்பாக அதிக மசாலா, எண்ணெய் கலந்த காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடலாம். 

உடலை நேராக வைத்து அமர வேண்டும். அதாவது நாம் பயணம் செய்யும் வாகனம் எந்த திசையில் போகிறதோ? அந்த திசையை நோக்கி அமர வேண்டும். எதிர் திசையில் அமரக்கூடாது. வெளிக் காற்று முகத்தில் படும்படி அமர வேண்டும். மூடிய நிலையில் இருக்கும் ஜன்னல்களை திறந்து விடுவது அவசியம்.

vomiting sense

செல்போன் பயன்படுத்துவது, புத்தகம் படிப்பது போன்ற செயல்கள் வாந்தி உணர்வை அதிகப்படுத்தும். எனவே, அதனை தவிர்க்க வேண்டும். இஞ்சி, எலுமிச்சை சாறு சாப்பிடுவது வாந்தி உணர்வை கட்டுப்படுத்தும். உடல் நீரேற்றமாக இல்லாவிட்டாலும் வாந்தி உணர்வு அதிகமாகும். நல்ல வாசனை மிக்க பொருட்களை நம்மிடம் வைத்துக் கொள்வது வாந்தி உணர்வை குறைக்கலாம். 

இதையும் படிங்க: மழைக்கு இதமாக உடனடி ரவா போண்டா.. உளுந்து ஊறவைக்க வேண்டாம்.. ஈஸியா செய்யலாம்.!

உதாரணத்திற்கு நல்ல பூக்களின் வாசனை, புதினா எண்ணெய், லாவண்டர் எண்ணெய் போன்றவை வாந்தி வராமல் தடுக்கும். அருகில் இருப்பவருடன் உரையாடுவது அல்லது பாடல் ஏதாவது கேட்பது போன்றவை கவனத்தை திசை திருப்புவதால் வாந்தி உணர்வை கட்டுப்படுத்தலாம். இதை எல்லாம் மேற்கொண்டும் உங்களுக்கு வாந்தி உணர்வு இருந்தால் மருத்துவரை சந்தித்து மாத்திரை பெற்றுக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: உங்களுக்கு நரைமுடி பிரச்சனையா..? நரை முடி கருப்பாக மாற இதை டிரை பண்ணி பாருங்க...