உங்களுக்கு நரைமுடி பிரச்சனையா..? நரை முடி கருப்பாக மாற இதை டிரை பண்ணி பாருங்க...



natural-dye-to-turn-gray-hair-black

பொதுவாக அனைவருக்கும் தங்கள் தலை முடி அடர்த்தியாகவும், கருப்பாகவும் இருக்க வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால், இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் சுற்றுச்சூழல் காரணமாகவும், உணவுமுறை காரணமாகவும் பலருக்கும் முடி உதிர்வு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனை உள்ளது.

அந்த வகையில், நரை முடியை கருப்பாக மாற்ற இயற்கையான முறையில் டை எப்படி தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

தேங்காய் எண்ணெய் - 1/4 கப்

மருதாணி பொடி - 4 தேக்கரண்டி 

Gray hair problem

செய்முறை :

முதலில் சுத்தமான ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தேங்காய் எண்ணெய் அதனுடன் 4 தேக்கரண்டி மருதாணி பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: சுவையான பூண்டு குழம்பு செய்வது எப்படி? டிப்ஸ் இதோ.!

பின்பு , இந்த கலவையை தலை முடியில் நன்றாக தடவி விட வேண்டும். ஒரு 20 நிமிடம் தலை முடியில் ஊற விட்டு பிறகு சிகைக்காய் கொண்டு தலை முடியை அலசி விட வேண்டும்.

இந்த முறையை பயன்படுத்துவதன் மூலம் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. மேலும், இந்த டை பயன்படுத்துவதன் மூலம் தலை முடி கருப்பாகவும், உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

இதையும் படிங்க: உலகம் எங்கே போனால் என்ன? நான் இருக்கேன்.. அம்மாவின் பாசம்.. நெகிழவைக்கும் வீடியோ.!