ரசம் கேள்விப்பட்டு இருப்பீங்க., புளித்தண்ணி கேள்விப்பட்டு இருக்கீங்களா?.. செய்வது எப்படி?..!



How to Prepare pulithanni in Tamil 

தென்மாவட்ட உணவுகளில், அங்குள்ள மக்களால் பெரிதும் விரும்பப்படும் எளிமையான குழம்பு வகை புளித்தண்ணி. இதனை சோற்றுடன் பிசைந்து சாப்பிடுவது வழக்கம், அதேபோல புளித்தண்ணி வைக்க ரசம் போல மிக எளிமையான முறையே பின்பற்றப்படும். இதனுடன் பொட்டுக்கடலை சட்னி, கெட்டியாக அரைக்கப்பட்ட தேங்காய் + காய்ந்த மிளகாய் துவையல் போன்றவை நன்றாக இருக்கும். 

புளித்தண்ணி செய்யும்முறை

புளி - எலுமிச்சை அளவு, 

காய்ந்த மிளகாய் - 5,

கடலை பருப்பு - தேவையான அளவு,  

மஞ்சள் தூள் - சிறிதளவு,

உப்பு - தேவையான அளவு,

பெருங்காயம் - சிறிதளவு,

கடுகு, உளுந்து - தாளிக்க தேவையான அளவு,

நல்லெண்ணெய் - சிறிதளவு,

கறிவேப்பில்லை - கையளவு

செய்முறை

முதலில் எடுத்துக்கொண்ட புளியை நீரில் ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சிட்டிகையளவு மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: நாவில் எச்சிலை வரவழைக்கும் காளான் சுக்கா; கமகமக்க சமைச்சி பழகுங்க பாஸ்.! 

பின் அடுப்பில் வாணெலியை வைத்து எண்ணெய் விட்டு, கடுகு-உளுந்து சேர்த்து, கடலைப்பருப்பு, கறிவேப்பில்லை, மிகளாய் வற்றல் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து சிறிது பொன்னிறமாகும் வரை காத்திருக்கவும். 

கடலைப்பருப்பு நிறம் மாறியதும் புளித்தண்ணீரை சேர்த்து, பெருங்காயத்தூளை இட்டு கிளற வேண்டும். நன்கு கொதித்ததும் எண்ணெய் மேலே மிதக்கும் தருவாயில் இதனை இறக்கினால் சுவையான புளித்தண்ணி தயார். இதற்கு தொடுகறியாக தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி ஆகியவற்றை வைத்து சாப்பிட்டு மகிழலாம்.

பதிவு நன்றி

திருநெல்வேலிக்காரன் சங்கரநயினார் பிள்ளை