திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நாவில் எச்சிலை வரவழைக்கும் காளான் சுக்கா; கமகமக்க சமைச்சி பழகுங்க பாஸ்.!
சப்பாத்தி, தோசை, காரசாரமான மற்றும் சுவை மிகுந்த அரிசி சாதத்துடன் சாப்பிட ஏற்ற, சுவையான காளான் சுக்கா செய்வது எப்படி என காணலாம். இதனை அப்படியேவும் குழந்தைகளுக்கு சிற்றுண்டி போலவும் வழங்கலாம்.
தேவையான பொருட்கள்
காளான் - 300 கிராம்,
பெரிய வெங்காயம் - 3,
பச்சை மிளகாய் - 2,
சோம்பு, லவங்கம், பட்டை, கிராம்பு, பிரிஞ்சு இலை - சிறிதளவு,
இஞ்சி-பூண்டு விழுது - 2 கரண்டி,
சீரகம் - 2 கரண்டி,
பெருஞ்சீரகம் - 2 கரண்டி,
மிளகு - 2 கரண்டி,
மல்லித்தூள் - 1 கரண்டி,
மிளகாய் தூள் - 2 கரண்டி,
கரம் மசால் - 1 கரண்டி,
செய்முறை
எடுத்துக்கொண்ட காளானை முதலில் நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். விருப்பம் இருப்பின் காளானை இரண்டாக அறிந்து வைத்துக்கொள்ளுங்கள். பின் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: விந்தணுக்கள் அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகள் கட்டாயம்!
அடுப்பில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சோம்பு, லவங்கம், பட்டை, கிராம்பு, பிரிஞ்சு இலை ஆகியவற்றை சேர்க்கவும். இவை லேசாக வறுபட்டதும் வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றை சேர்க்கவும்.
சிறிதளவு உப்பு சேர்ந்து நன்கு வதக்கிவிட்டு, பின் நாம் எடுத்து வைத்துக்கொண்ட காளானை அதனுடன் சேர்ந்து நன்கு வதக்கி எடுக்க வேண்டும். காளான் வதங்க தொடங்கியதும் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, நீர் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விடவேண்டும். குறைந்த அளவு நீர் ஊற்றி வேகவைப்பது சுக்காவுக்கு தனி சுவையை கொடுக்கும்.
இறுதியாக காளான் வெந்ததும் மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிதமான தீயில் தனியாக வறுத்து, காளானுடன் சேர்த்து கிளறி மல்லித்தழைகளை தூவி இறக்கினால் காளான் சுக்கா தயார்.
இதையும் படிங்க: அச்சச்சோ.. பல் துலக்குவதில் அலட்சியமா?.. புற்றுநோய் எச்சரிக்கை.!