சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
திருமணத்திற்கு தயாராகும் பெண்களா நீங்கள்?. கவனம் செலுத்த வேண்டியது எதில்?..!
மனிதராக பிறக்கும் ஒவ்வொரு பெண்களும் தங்களின் வாழ்க்கையில் அடுத்தகட்ட நகர்வை நோக்கி செல்ல திருமணம் என்ற பந்தத்தில் தனது துணையுடன் இணைய தயாராகுகின்றனர். பெண்கள் திருமணத்திற்கு தயாராகும் நேரத்தில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து இன்று காணலாம்.
சரும பராமரிப்பு :
திருமணத்தின் போது ஒப்பனை செய்தலும், அழகை மேம்படுத்த சரும ஆரோக்கியம் முக்கியமானதாகும். திருமணத்திற்கு 3 மாதத்திற்கு முன்னதாகவே சரும பராமரிப்பை மேற்கொள்ள தொடங்க வேண்டும். இதனால் திருமண நாளில் சரும பொலிவு அதிகரித்து காணப்படும். இரசாயன பொருட்கள் கலந்த அழகு பொருட்களை பயன்படுத்துவதற்கு பதில், இயற்கையான அழகு பராமரிப்பு பொருட்களை உபயோகித்தால் நல்லது.
உணவில் கவனம் :
விலை அதிகம் உள்ள கிரீம், பேஸ் பேக் போன்றவற்றை உபயோகம் செய்து முக அழகை அதிகரித்தாலும், நமது உணவு தான் சருமத்தின் உண்மையான ஆரோக்கியத்தை உள்ளிருந்து அதிகரிக்கிறது. இதனால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். எண்ணெயில் பொறித்த உணவு, துரித உணவுகளை தவிர்த்து காய்கறி, பழங்கள் போன்ற சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடலாம்.
உறக்கம் :
சரும பராமரிப்பு, உணவு போலவே போதுமான அளவு உறக்கமும் ஒவ்வொரு நபருக்கும் அவசியமானதாகும். திருமணத்திற்கு முன்னர் 8 மணிநேரம் உறங்கி எழுந்தால், மன மகிழ்ச்சி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும், கண்களை சுற்றிலுள்ள கருவளையம் நீங்கும், புத்துணர்ச்சி ஏற்படும்.
உடற்பயிற்சி :
திருமணத்திற்க்கு முன்னர் தினமும் லேசான உடற்பயிற்சியை செய்து வந்தால் உடலும், மனதும் இளமையாகும். சரும ஆரோக்கியமும் அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடலின் ஆற்றல் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும்.
மனநலம் :
உடல் நலனைப்போல, மனநலமும் திருமணத்தின் போது முக்கியத்துவம் ஆகிறது. திருமணத்தில் ஆண் - பெண் இடையேயான புது உறவு தொடங்குவதை போல, புதிய சொந்தமும் சந்திக்கிறது. இதனை ஏற்படும் மகிழ்ச்சி மற்றும் சிக்கலை அரவணைத்து செல்ல மனநலம் உதவி செய்யும்.
இது திருமணம் ஆகப்போகும் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண் - பெண் என ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும். அன்பே சிவம்.