சருமம் தங்கமாக ஜொலிக்க வெல்லத்தை இப்படி யூஸ் பண்ணி பாருங்க.!?



Jaggery for face brightness

சருமத்தை எவ்வாறு பளிச்சென்று வைத்துக் கொள்ளலாம்?

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் அழகு என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் நாம் உண்ணும் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளும், அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைகளும் நம் உடல் நிலையை கெடுப்பதோடு, இளமையிலும் முதுமை தோற்றத்தை தருகிறது. ஒரு சிலருக்கு சருமம் பொலிவாகவும், அழகாகவும் இல்லாதது தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தும். இவ்வாறு சருமத்தை தங்கம் போல் பொலிவாக மாற்றுவதற்கு வெல்லத்தை இப்படி யூஸ் பண்ணி பாருங்க

Jaggery

வெல்லத்தின் நன்மைகள்

கரும்பு மற்றும் பனையில் இருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்படாத சர்க்கரை தான் வெல்லம். நாம் வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தி இனிப்புகள், டீ, காபி போன்றவற்றை செய்வது நம் உடல் நலத்திற்கு நன்மையை ஏற்படுத்தும். குறிப்பாக சருமம் மற்றும் முடி போன்றவற்றிற்கு வெல்லம் மிகுந்த நன்மையை தரும்.

இதையும் படிங்க: சீன மக்கள் விரும்பி சாப்பிடும் வெள்ளரி விதை.! என்ன காரணம் தெரியுமா.!?

வெல்லத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

வெல்லத்தில் இரும்பு, பொட்டாசியம், மேக்னீசியம், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நம் சருமத்தை முதுமையிலும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது. தோலில் சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, ஒவ்வாமை, முகப்பரு போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கிறது.

Jaggery

முகப்பொலிவிற்கு வெள்ளத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்

வெல்லத்தை பொடி செய்து எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு மஞ்சள் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். முகம் நன்றாக காய்ந்தவுடன் இதனை சோப் எதுவும் பயன்படுத்தாமல் கடலை மாவு அல்லது பாசிப்பயிறு மாவு தேய்த்து முகத்தை கழுவி வர வேண்டும். இவ்வாறு ஒரு வாரத்திற்கு செய்து வந்தாலே முகம் பளிச்சென்று தங்கம் போல் மின்னும்.

இதையும் படிங்க: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாதாம் பிசின்.? வேறு என்னென்ன நன்மைகளை தரும் தெரியுமா.!?