சீன மக்கள் விரும்பி சாப்பிடும் வெள்ளரி விதை.! என்ன காரணம் தெரியுமா.!?



Reasons for china people like to eat cucumber seeds

சீன மக்கள் விரும்பி சாப்பிடும் வெள்ளரி விதை

பொதுவாக நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகளில் மிக அதிகமாக ஊட்டச்சத்து நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் வெள்ளரிக்காயில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வெள்ளரிக்காயில் உள்ள விதையை பலரும் சாப்பிடுவதில்லை. ஆனால் இதில் உள்ள விதைகளை மட்டும் சேகரித்து சீனர்கள் இதனை உணவில் சேர்த்து உண்டு வருகின்றனர். இந்த வெள்ளரி விதையில் பல வகையான நன்மைகள் உள்ளது என்பது குறித்து தெரியுமா? இதைப்பற்றி இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

foods

வெள்ளரி விதையில் உள்ள நன்மைகள்

குறிப்பாக சீனர்கள் என்றாலே சுறுசுறுப்புக்கு பெயர் போனவர்கள் என்று சொல்லலாம். அந்த வகையில் சீன மக்கள் வெள்ளரிக்காய் விதையை விரும்பி உண்ணுவதற்கான காரணம் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தான். வெள்ளரிக்காய் விதையை சாப்பிட்டு வந்தால் ஆண்கள் தாம்பத்தியத்தில் குதிரை பலம் பெறலாம். விந்து முந்துதல், விந்தணு குறைபாடு போன்ற பல தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வெள்ளரிவிதை சரி செய்கிறது.

இதையும் படிங்க: சளி தொல்லை, ஆஸ்துமா குணமடைய இந்த நெஞ்செலும்பு சூப்பை வாரத்திற்கு ஒருமுறை குடித்து பாருங்க.!?

மேலும் பித்த நீர், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான நோய்களையும் எளிதாக சரி செய்கிறது. உடல் சூடு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் வெள்ளரி விதையை அரைத்து வயிற்றை சுற்றி தேய்த்துக் கொண்டால் உடனடியாக நோய் தீரும். சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்கள் வெள்ளரி விதையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

foods

முதுமையிலும் இளமை தோற்றம்

வெள்ளரிக்காய் விதையில் மெக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் போன்றவை நிறைந்துள்ளது. இதனை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது முதுமையிலும் இளமையாக தோற்றமளிக்கலாம். வெள்ளரி விதையில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி ஊட்டச்சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதால், உடலை நோய் கிருமிகளில் இருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதையும் படிங்க: ஒரு கப் கோதுமை மாவில் ஹெல்தியான இடியாப்பம்.! இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!?