பார்க்கும்போதே எச்சில் ஊறுதே... குட்டீஸ் ஃபேவரிட் மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை.!! சிம்பிள் ரெசிபி.!!
குழந்தைகளுக்கு மதியம் லஞ்ச் பாக்ஸ் கொடுக்கும்போது ஒரே விதமான சைட் டிஷ் செய்து கொடுத்தால் போர் அடிக்கும். எனவே குழந்தைகள் ரசித்து சாப்பிடுற மாதிரி டேஸ்டியான மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை எப்படி செய்றதுன்னு இன்னைக்கு பாக்கலாம்.
தேவையான பொருட்கள்
காளான் 1 கப் (நறுக்கியது), மிளகு - 1 ஸ்பூன், குடைமிளகாய் - 1/2, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன், பெரிய வெங்காயம் 1, மல்லி தூள் 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், கரம் மசாலா 1/4 ஸ்பூன், வரமிளகாய் - 1, சோம்பு - 1/2 ஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் எண்ணெய் தேவையான அளவு மற்றும் உப்பு சுவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து அதில் மிளகாயை போட்டு 2 நிமிடங்கள் லேசாக வாசம் வரும் வரை வதக்கிக் கொள்ளவும். பின்பு அதனை எடுத்து வைத்து சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது மீண்டும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு வந்ததும் வரமிளகாய், சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் இதில் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
இதையும் படிங்க: நைட் ஷிப்ட் வேலை செய்பவரா நீங்கள்.? இந்த உணவுகளால் உங்களுக்கு ஆபத்து வரலாம்.!!
அதன் பச்சை வாடை போன பிறகு குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிய பின் காளானையும் சேர்த்து வதக்கவும். காளானில் உள்ள நீர் வற்றியதும் மிளகு தூள், கரம் மசாலா, மல்லித்தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக வதக்கவும். ஒரு 5 நிமிடம் நன்றாக வதக்கிய பின்னர் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொத்தமல்லி இலைகளையும் தூவி இறக்கினால் சுவையான மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை ரெடி. வாங்க சாப்பிடலாம்.
இதையும் படிங்க: மக்களே உஷார்... தேயிலை தூளால் புற்று நோய்க்கு வாய்ப்பு.!! சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை.!!