மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
40 வயதை தாண்டி ஆண்கள் மாரடைப்பு வராமல் இருப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய வைட்டமின்கள்.!
நவீன வாழ்க்கை முறையும், ஊட்டச்சத்தான உணவுகளும்
பொதுவாக அந்த காலத்தில் பெரும்பாலும் மக்கள் கடின உழைப்புடன், ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டனர். இதனால் 80 வயது வரையில் நீடித்த ஆயுளுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஊட்டச்சத்து இல்லாத பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளை உண்பதால் 40 வயதை தாண்டியவுடன் பலர் பலவிதமான நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்
இதில் குறிப்பாக பெண்களை விட ஆண்களுக்கு மாரடைப்பு பிரச்சனை அதிகமாக வருகிறது என்று ஒரு ஆய்வின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. மாரடைப்பு பிரச்சனையிலிருந்து 40 வயதை தாண்டிய ஆண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு குறிப்பிட்ட வைட்டமின்களை எடுத்துக் கொண்டால் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். என்னென்ன வைட்டமின்களை எடுத்துக் கொள்ளலாம் என்பதை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
இதையும் படிங்க: எச்சரிக்கை.! சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும் உணவுகள் எது தெரியுமா.!?
40 வயதை தாண்டி ஆண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய வைட்டமின்கள்
வைட்டமின் டி - இந்த வைட்டமின் டி ஊட்டச்சத்தை பெறுவதற்கு தினமும் காலை வெயிலில் 15 முதல் 20 நிமிடங்கள் நின்றால் வைட்டமின் டி ஊட்டச்சத்து கிடைக்கும். இந்த ஊட்டச்சத்து எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பது போன்றவற்றை செய்து வருகிறது.
மேலும் கால்சியம், வைட்டமின் சி, மக்னீசியம், வைட்டமின் பி 12, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் 40 வயதை தாண்டிய ஆண்களுக்கு கட்டாயமாக தேவை என்பதால் இவற்றை உணவாகவோ அல்லது மருந்தாகவோ கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ப்ரைட் ரைஸ் அடிக்கடி சாப்பிடும் நபரா நீங்கள்.! உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சி செய்தி.!?