ப்ரைட் ரைஸ் அடிக்கடி சாப்பிடும் நபரா நீங்கள்.! உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சி செய்தி.!?
பிரைட் ரைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
தற்போதுள்ள நவீன கட்டத்தில் பலரும் பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்ணுகின்றனர். இந்த உணவின் சுவை நன்றாக இருந்தாலும் இதில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைப்பதில்லை. மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் நம் உடலில் பல வகையான நோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றது. குறிப்பாக பிரைட் ரைஸ் எனப்படும் ஃபாஸ்ட் ஃபுட்டில் பல வகையான ரசாயனங்கள் அஜினோமோட்டோ போன்றவை சேர்க்கப்படுகின்றது. இதனால் உடலில் ஏற்படும் நோய்களை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
ப்ரைட் ரைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நோய்கள்
ப்ரைட் ரைஸில் அதிகமாக கலோரிகள் இருக்கின்றது கலோரிகள் உடலுக்கு நன்மையை தரும் என்றாலும், அதிகபட்ச கலோரிகள் உடலுக்கு பல கேடை ஏற்படுத்தும். குறிப்பாக இதில் சமைக்க பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் முட்டைகள் உடலில் அதிக பருமனை ஏற்படுத்தி கொலஸ்ட்ரால் பிரச்சனையை உருவாக்குகிறது.
இதையும் படிங்க: அதிர்ச்சி.! காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் உடையவரா நீங்கள்.? இந்த நோய்கள் வரலாம்.!?
மேலும் பிரைட் ரைஸ்யில் நார்ச்சத்து இல்லாததால் இது செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், குடல் பிரச்சினைகளை ஏற்படுத்திகிறது. இப்பிரச்சனைகள் அதிகமானால் இதய நோய், ஒரு சில புற்று நோய்களுக்கு வழிவகை செய்கிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் அதிகப்படியான காரம் அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு நோயை தீவிர படுத்துகிறது.
குறிப்பாக இதில் சேர்க்கப்படும் சோயா சாஸ், சில்லி சாஸ் போன்ற சாஸ் வகைகளில் அதிக அளவு சோடியம் இருக்கிறது. மேலும் இதில் உப்பு சேர்க்கப்படுவதால் இவ்வாறு அளவுக்கு அதிகமான சோடியம் மற்றும் உப்பு உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு பிரைட் ரைஸ்சில் சேர்க்கப்படும் பல பொருட்களும் உடலுக்கு கேடு விளைவிப்பதால் பிரைட் ரைஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்த நோய் இருப்பவர்கள் எலுமிச்சை பழத்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.? மருத்துவர்கள் எச்சரிக்கை.!?