முகத்தில் இந்த மாற்றங்கள் ஏற்படுகிறதா.? கல்லீரல் நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.!?



symptoms-for-fatty-liver

கல்லீரல் வீக்கம் ஏற்பட காரணம்

தற்போது இருக்கும் நவீன காலகட்டத்தில் பலருக்கும் பலவிதமான நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக கொழுப்பு கல்லீரல் (fatty liver)பிரச்சனை பலரையும் பாதித்து வருகிறது. பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை அதிகம் உண்பது, மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற தவறான பழக்க வழக்கங்களினால் இந்த பிரச்சனை பலருக்கும் இருந்து வருகிறது.

liver

இவ்வாறு கல்லீரலில் அதிகப்படியான கொழுப்புகள் சேர்ந்து கல்லீரல் வீக்கம் அடைகிறது. மேலும் இதை கண்டு கொள்ளாமல் விட்டால் கல்லீரலின் செய்ல்பாடுகளில் தடை ஏற்பட்டு உயிருக்கு மிகப் பெரும் பாதிப்பாக அமையும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். கல்லீரலில் கொழுப்பு சேருவதை எவ்வாறு கண்டறியலாம் என்பதை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: குளிர்கால சளி, காய்ச்சலால் அவதிப்படுறீங்களா.? இந்த கசாயத்தை குடித்து பாருங்க.!?

கொழுப்பு கல்லீரலின் அறிகுறிகள்
1. முகம் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக மாறுதல் - கல்லீரலில் கொழுப்பு சேருவதால் அதன் செயல்பாடுகளில் தடை ஏற்பட்டு தோல், முகம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
2. முகப்பரு - முகத்தில் அடிக்கடி பருக்கள் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கேற்ற சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. இது கல்லீரல் வீக்கம் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

liver

3. சிவப்பு புள்ளிகள் - முகம் மற்றும் உடலில் சிவப்பு புள்ளிகள் திடீரென்று தோன்றுவது கல்லீரல் வீக்கம் நோயின் அறிகுறியாகும்.

4. கண்களுக்கு கீழே வீக்கம் - ஒரு சிலருக்கு எப்போதும் கண்களுக்கு கீழே வீக்கமாக காணப்படும். இது கல்லீரல் நோயின் அறிகுறியாக கருதப்படுகிறது.

5. தோல் வறடசி - தோலில் வறட்சி மற்றும் அரிப்பு எடுப்பது போன்ற பிரச்சனைகள் கல்லீரல் வீக்கம் நோயின் அறிகுறியாகும். எனவே மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

இதையும் படிங்க: இந்த சத்து உடலில் குறைந்தால் மன அழுத்தம் ஏற்படுமா.! உடனே மருத்துவரை பாருங்க.!?