பட்டனை திறந்துபோட்டு, படு பயங்கர கவர்ச்சி.. கருப்பன் பட நடிகையால், அதிர்ந்து போன இணையவாசிகள்.!
இந்த சத்து உடலில் குறைந்தால் மன அழுத்தம் ஏற்படுமா.! உடனே மருத்துவரை பாருங்க.!?
தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கங்களினாலும், மாறிவரும் வாழ்க்கை முறையினாலும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதில் குறிப்பாக பலருக்கும் ஊட்டச்சத்து இல்லாத உணவு முறைகளினால் உடலில் கால்சியம் சத்து மிகவும் குறைந்து வருகிறது. கால்சியம் சத்து குறைவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
கால்சியம் சத்து குறைவதால் ஏற்படும் பாதிப்புகள்
1. எலும்பு பலவீனம்: கால்சியம் குறைவதால் எலும்புகள் பலவீனமாகி, மூட்டு வலி, கை, கால் வலி, எலும்பு தேய்மானம் போன்ற பல விதமான பாதிப்புகள் ஏற்படும்.
2. பசியின்மை : உடலில் கால்சியம் மிகவும் குறைவாக இருந்தால் பசியின்மை, வயிற்று புண், போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
3. மாதவிடாய் பிரச்சனைகள் : உடலில் கால்சியம் சத்து குறையும் போது மாதவிடாய் நேரத்தில் குறைவான இரத்தப்போக்கு மற்றும் வயிற்று வலி மற்றும் முதுகு வலியுடன் உதிரம் வெளியேறுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
4. மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு : கால்சியம் சத்து குறைவால் மன அழுத்தம் தூக்கமின்மை, மனச்சோர்வு ஏற்படலாம்.
5. எலும்பு ஆரோக்கியம் : உடலில் கால்சியம் சத்து குறைவாக காணப்பட்டால் எலும்பு அல்லது மூட்டுகளில் காயம் ஏற்படும் போது காயத்தை ஆற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
இதையும் படிங்க: ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க இதை செய்து பாருங்க.!?
கால்சியம் அதிகம் உள்ள உணவுகள்:
பால் மற்றும் பால் தயாரிப்புகள், முட்டை, பச்சை இலைக்காய்களான கீரைகள், முட்டைகோஸ், காலிபிளவர், கொத்தமல்லி போன்றவற்றில் கால்சியம் அதிகமாக உள்ளது. மேலும் சோயா மற்றும் ஆலிவ் எண்ணெய்களில் கால்சியம் அதிகம் உள்ளது. குறிப்பாக சால்மன் மற்றும் மத்தி போன்ற மீன்களில் கால்சியம் உள்ளது. பச்சை பருப்பு, பூசணிக்காய் போன்ற காய்கறிகளிலும் கால்சியம் உள்ளது. இது போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் நோய்களை தடுக்கலாம்.
இதையும் படிங்க: ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க இதை செய்து பாருங்க.!?