உயிரையே காக்கும் பழங்கள்.. கோடைகாலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டியவை.! 



these fruits are very good for summer problems

கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே கடுமையான வெயில் தற்போது மக்களை வாட்டி வதைக்கிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு அதிகப்படியான வெப்பம் சுட்டெரிக்கிறது. இன்னும் மே மாதம் என்ன செய்ய போகிறதோ என்ற பயத்தை பொது மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. 

கோடைகாலம் வந்தால் அத்துடன் கோடைகால வியாதிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதிகப்படியான வெப்பம், வியர்வை மற்றும் உடல் நீர் ஏற்றமாக இல்லாமல் போவது உள்ளிட்டவை காரணமாக நமது உடலில் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும். அதிலும் நீரேற்றம் குறைவாக இருக்கும் பட்சத்தில் அது உயிருக்கே ஆபத்தாக கூட முடியும்.

Fruits

இந்த காலகட்டத்தில் குழந்தைகளை மற்றும் முதியோர்களை நாம் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த கோடைகால பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க சில பழங்களை சாப்பிட்டால் அது பெரிய அளவில் கை கொடுக்கும். அவை என்னவென்று பார்க்கலாம். 

இதையும் படிங்க: உடல் சூட்டை குறைக்க வெந்தயக் களி.! சர்க்கரை நோயாளிகளுக்கு சூப்பர் ரெசிபி.!

சிட்ரஸ் நிறைந்த ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிடுவதால் நம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்து வெயில் தாங்கக்கூடிய சக்தியை உடலுக்கு கொடுக்கிறது. தொண்டையில் வறட்சி ஏற்படாமல் இருக்க வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை குடித்து வரலாம். 

உடலுக்கு தேவையான கால்சியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட சத்துக்களை கொடுக்கக்கூடிய இளநீரை அன்றாடம் குடித்து வரலாம். மேலும், முலாம் பழ ஜூஸ் குடிப்பதால் கண் சூடு, கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.