"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
உடல் சூட்டை குறைக்க வெந்தயக் களி.! சர்க்கரை நோயாளிகளுக்கு சூப்பர் ரெசிபி.!

நம் முன்னோர்கள் "உணவே மருந்து!" என வாழ்ந்து வந்தார்கள். ஆனால், தற்போது இருக்கும் சூழ்நிலையில் நாம் உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. அவ்வாறு, இல்லாமல் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது ஆரோக்கியமான உணவுகளான கம்பு, கேழ்வரகு, திணை போன்ற உணவுகளை உண்ணுங்கள். இவைகள் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கும். அவ்வகையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயக் களி எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
வெந்தயக் களி செய்ய தேவையானப் பொருட்கள் :
உளுந்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1/4 கப்
கருப்பட்டி - 1/2 கப் (சர்க்கரை இருப்பர்வகள் இதை தவிக்கலாம்)
நல்லெண்ணெய் - 6 தேக்கரண்டி
பச்சரிசி - 1/2 கப்
செய்முறை :
முதலில் மேலே குறிப்பிடுள்ள அளவுகளின் படி உளுந்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் பச்சரிசி ஆகியவற்றை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
இதையும் படிங்க: குதிரைவாலியில் பூரண கொழுக்கட்டை.. அசத்தல் சுவையில் ஒரு ஆரோக்கியமான ரெசிபி.! உடனே ட்ரை பண்ணுங்க.!
பிறகு, இதனை மாவு அரைக்கும் இயந்திரத்தில் தோசை மாவு பதத்திற்கு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது, அடுப்பைப் பற்ற வைத்து அதில் அடி கனமான பாத்திரத்தை வைக்கவும். பாத்திரத்தில் கருப்பட்டி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பாகு பதம் வரும் வரை கிளறவும். இப்போது, இதில் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து மிதமான தீயில் நன்றாக கிளறவும். பிறகு, 6 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்க்கவும்.
பின்பு, கெட்டியான பதம் வந்தவுடன் இறக்கி விடவும். இந்த களியை ஒரு தட்டில் சிறிது வைத்து நடுவில் சிறு குழி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க: கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான ரோஸ் மில்க்..! கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்..!!