சமயபுரம் பக்தர்களே உஷார்.! பாதயாத்திரை, இறுதி யாத்திரையாக மாறிய சோகம்.!



perambalur women accidently died who went to samayapuram on foot

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதயாத்திரை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் அருகே ஓலைப்பாடி கிராமத்தில் வசித்து வரும் முருகன் என்பவருக்கு கொளஞ்சி (55 வயது) என்ற மனைவி இருக்கின்றார். நேற்று முன்தினம் திருச்சி மாவட்டத்தில் இருக்கும் சமயபுரம் கோவிலுக்கு கொளஞ்சி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: தென்காசி: 18 வயது சிறுவனுக்கு எமனான நாய்; திடீரென குறுக்கே புகுந்ததால் விபரீதம்.. கண்ணீர் சோகம்.!

திடீர் விபத்து

சக பக்தர்களுடன் அவர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் இருர் பகுதிக்கு அருகில் அவர் வந்த போது அந்த வழியே வந்த ஒரு வாகனம் கொளஞ்சியின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

accident

படுகாயம்

இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவருக்கு மரணம் ஏற்பட்டுள்ளது.

இறுதி யாத்திரை

இது பற்றி பாடாலூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் பற்றிய தகவல்களை விசாரித்து வருகின்றனர். கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற அந்தப் பெண்ணிற்கு அதுவே இறுதி யாத்திரையாக மாறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பயணிகள் இரயில் மோதி தலை துண்டாகி மரணம்; பொங்கலுக்கு அக்கா வீட்டிற்கு வந்து பலியான பரிதாபம்.!