ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
12 வயது சிறுவனுக்கு எமனான ஊஞ்சல்.. கழுத்தில் சேலை இறுக்கி நேர்ந்த சோகம்.! பெற்றோர் கண்ணீர்.!

ஊஞ்சல் சேலை கழுத்தை இறுக்கி மாணவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம், இடையார் பகுதியில் வசித்து வருபவர் வீராசாமி. இவரின் மகன் எபி சாமுவேல் (வயது 12). சிறுவன் அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: 15 வயது சிறுமி பலாத்காரம்.. கேடி மகனுக்கு உடந்தைதாக தந்தை.. போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!
சம்பவத்தன்று, தனது வீட்டின் அருகே இருக்கும் முந்திரி தோட்டத்திற்கு சென்றவர், ஊஞ்சல் கட்டி விளையாடி இருக்கிறார். அப்போது, சிறுவனின் கழுத்தில் சேலை இறுகியது.
மூச்சுத்திணறி பலி
இதனால் மூச்சுத்திணறய சாமுவேல், நிகழ்விடத்திலேயே மயங்கினார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து உடையார்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் நிதிநிறுவன ஊழியர் எரித்துக்கொலை? பணம் வசூலிக்கச் சென்ற இடத்தில் சடலம் மீட்பு.. பதறவைக்கும் சம்பவம்.!