திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி! டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
சமீபத்தில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பொட்டனேரியில் பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. அந்த கூட்டத்திற்கு இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து கூறியுள்ளார்.
முதலில் அவர் பேசும் போது இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி என்றால் அது பா.ம.க தான் என்றும், தமிழக இளைஞர்கள் அவசியம் அரசியலை கற்று கொள்ள வேண்டும். அப்போது தான் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியும் என கூறினார்.
மேலும் அவர் ஆட்சிக்கு வந்தால் இலவச படிப்பு, சுகாதாரமான இலவச மருத்துவம், வேலை இல்ல திண்டாட்டத்தை ஒழிக்க ஆண்டுக்கு 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஆகியவை வழங்கம்படும் எனவே இது போன்ற பல நல்ல திட்டங்களை செயல்படுத்த மக்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களின் சந்திப்பில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் அவர்கள் கூட்டணி குறித்து பேசியுள்ளார். தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் மற்றும் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் நாங்கள்தான் அடுத்த ஆட்சியை அமைப்போம் என்று சொல்கிறார்கள்.
ஏன் கட்சி தொடங்கி 30 ஆண்டுகள் ஆன நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று சொல்லக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்போம் என்பதை பற்றி தேர்தல் வரும் நாளில் அறிவிக்கப்படும் என்ற அதிரடி பதிலை கூறியுள்ளார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.