கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
29 பைசா பிரதமர் மோடி.. கஞ்சா உதயநிதி.. அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்!
18வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து பாஜக, காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதன்படி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதன்படி தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் வரி செலுத்தினால், அதற்கு பதிலாக மத்திய அரசு 29 பைசா மட்டுமே திரும்ப தருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பிரதமரை 29 பைசா பிரதமர் என உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி, திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பேசிய அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி பிரதமர் மோடியை விமர்சித்தால் அவரை கஞ்சா உதயநிதி என நாங்கள் அழைப்போம் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்ததாகவும், இதனை தடுக்க தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.