நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
#Breaking: தோல்வியடைந்த திமுக.. அன்பில் மகேஷுக்கு அமைச்சர் பொறுப்பு தேவையா? - அண்ணாமலை காட்டம்.!

குழந்தைகளை பாதுகாக்க தவறிய அமைச்சர் பதவி விலக வேண்டும் என அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அரசு உயர்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக இருந்த பெருமாள் (வயது 58), அதே பள்ளியில் பயின்று வரும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்து, போக்ஸோவில் கைது செய்யப்பட்டார். ஓராண்டில் பணி ஓய்வு பெறவிருந்த பெருமாள் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டதைத்தொடர்ந்து, அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விசயத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, பொறுப்பில் இருக்கும் திமுக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது குற்றச்சாட்டை முன்வைத்து, குழந்தைகளை பாதுகாக்க தவறிய அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கவுன்சிலர் கூட ஆக முடியாது - பாஜக அண்ணாமலையை கலாய்த்த அமைச்சர் சேகர்பாபு.!
பாலியல் தொல்லை
இதுகுறித்த அண்ணாமலையின் ட்விட் பதிவில், "புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அமைச்சருக்கு தகுதி இல்லை
பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை.
உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து, திரு. அன்பில் மகேஷ் விலக வேண்டும். முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
— K.Annamalai (@annamalai_k) February 19, 2025
பள்ளிகளில் மாணவ மாணவியர்…
இதையும் படிங்க: சிரிப்பு, கொண்டாட்டம்.. டெல்லியில் பாஜக ஆட்சி., தமிழிசை உச்சகட்ட மகிழ்ச்சி.. அடுக்கு மொழியில் கலாய்.!.!