53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
"பகையை மறந்து இணைவோம்..."மீண்டும் இணைகிறதா அதிமுக - பாஜக கூட்டணி.? தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி.!!
அதிமுகவை போன்றே பாஜகவும் திமுக அரசு ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று நினைப்பதால் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கிடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி
2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் அந்தத் தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போது மும்முரமாகி இருக்கிறது. இந்நிலையில் 2026 ஆம் வருடத் தேர்தலில் அதிமுக தலைமையில் திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து திமுக தலைமையிலான கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். மேலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இருக்குமா.? என்ற கேள்விக்கு, அது பற்றி தேர்தல் நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார்.
பகைமையை மறந்து இணைவோம்
இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்த பாஜக கட்சியின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்தில் பாஜக உடன்படுவதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர் அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைந்து திமுக அரசை 2026 சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து தங்களின் குரலாகவும் இருக்கிறது என அவர் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "எனக்கு பயந்து திமுக வெளியிட்ட மொட்டை கடுதாசி.." ஆளும் கட்சிக்கு இபிஎஸ் பதிலடி.!!
மேலும் 2026 ஆம் வருட சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் எனவும் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். மாற்றத்தை விரும்பும் அனைத்துக் கட்சிகளும் திமுகவிற்கு எதிராக ஒரே அணியில் இணைந்து மக்கள் விரோத அரசை வீழ்த்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். இவரது பேட்டியின் மூலம் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் கூட்டணி மலர வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "பாஜகவுக்கு நோ ; திமுக தான் மெயின் டார்கெட்.." கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!!