இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
"எனக்கு பயந்து திமுக வெளியிட்ட மொட்டை கடுதாசி.." ஆளும் கட்சிக்கு இபிஎஸ் பதிலடி.!!
ஆளும் திமுக அரசிற்கும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் அறிக்கை யுத்தம் தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் நாடகமாடுவதில் பிஎச்டி பட்டம் பெற்ற திமுகவினர் எல்லாப் பழிகளையும் அதிமுக மீது சுமத்துவது கண்டிக்கத்தக்கது என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கை
திமுகவின் 42 மாத ஆட்சி தொடர்பாக அறிக்கை விட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி " அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் எதுவும் திமுக அரசால் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக அவர்களின் உணர்வுகள் ஆளும் கட்சிக்கு எதிராக வெளிப்பட்டு வருகிறது எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் 2026ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசாக வழங்குவோம் என அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மொட்டை கடுதாசி
அரசு ஊழியர்கள் குறித்து திருச்சி விமான நிலையத்தில் என்னிடம் பேட்டி கேட்டபோது ஆளும் கட்சி, அரசு ஊழியர்களுக்கு செய்து வரும் அநீதி பற்றி தெரிவித்தேன். இதனால் கோபமடைந்த திமுகவினர் பெயர் இல்லாமல் மொட்டை கடுதாசி போல 7 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர் என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் எல்லா நாடகங்களையும் திமுக அரங்கேற்றிவிட்டு பழியை மட்டும் அதிமுக மீது சுமத்துவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதையும் படிங்க: "பாஜகவுக்கு நோ ; திமுக தான் மெயின் டார்கெட்.." கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!!
காவல்துறை அடக்குமுறை
அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த முழு சுதந்திரம் இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை காவல்துறையை வைத்து அடக்கும் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. மேலும் மொட்டை கடுதாசி போன்ற அறிக்கையில் தங்களது 42 மாத கால ஆட்சியில் என்ன செய்தோம்.? என்று திமுக கூறவில்லை. மாறாக 18 ஆண்டு கால கலைஞரின் ஆட்சியில் அவர் என்ன செய்தார் என்பதை தான் கூறியிருக்கிறார்கள் என கண்டிப்புடன் தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இதையும் படிங்க: "துண்டு சீட்டு இல்லாமல் பேசுவாரா ஸ்டாலின்.." முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி.!!