96 படம் குறித்த சூப்பர் செய்தி... ரசிகர்களே தயாரா.?! வெளியாகவுள்ள சூப்பர் அப்டேட்.?!
பதறி ஓடி, செருப்பை எடுத்த சேகர் பாபு.. கேஷுவலாக நடந்த ஸ்டாலின்.. தீயாக பரவிய அமைச்சரின் வீடியோவால் சர்ச்சை.!
கட்சித்தாவிய சேகர்பாபு :
திமுக அமைச்சராக இருக்கும் சேகர்பாபு கடந்த ஜனவரி 2011-இல் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு கட்சி தாவினார். அதன் பின், 2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அவர் தனக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட்டு ஜெயித்த அவருக்கு திமுக சார்பில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் :
தற்போது இவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்து வருகின்றார். திமுகவிற்கு இவர் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்து வரும் நிலையில், கோவில் குறித்த பல்வேறு சர்ச்சைகளிலும் அவரது பெயர் அடிபட்டுக்கொண்டு இருக்கிறது. அது போதாது என்று தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சேகர்பாபு சிக்கியுள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு எதிராக போராடிய 20 வழக்கறிஞர்கள் கைது.! நீதிமன்றத்தில் சர்ச்சை.!
வைரல் வீடியோ :
அந்த வீடியோவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னாள் ஒரு செருப்பு கிடந்தது. இதை பார்த்ததும் பதறியடித்து ஓடிய சேகர்பாபு ஓடிச் சென்று தன் கையால் அந்த செருப்பை தள்ளி வைத்தார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொத்தடிமை உடன்பிறப்புகள் :
ஏற்கனவே, திமுகவிற்கு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கொத்தடிமை வேலை செய்கின்றனர் என்றும், உதயநிதி, இன்ப நிதி என்று அவர்களது அடிமைத்தனம் நீண்டு கொண்டே போகிறது என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், அமைச்சரின் இந்த செயலானது அதை நிரூபிக்கும் விதமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு எதிராக போராடிய 20 வழக்கறிஞர்கள் கைது.! நீதிமன்றத்தில் சர்ச்சை.!