அரசியல் விமர்சனத்திற்காக உயிரையே பணயம் வைத்த பாஜக மாநில தலைவர்; தீவிர உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி.!



Delhi BJP State President Virendra Sachdeva Admitted Hospital after Bath on Contaminated Yamuna River 

 

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மீ கட்சியின் சார்பில் மாநில அளவிலான ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பணியாற்றி வந்த நிலையில், மதுபான கொள்கை விவகாரத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது பிணையில் வெளியே இருக்கிறார். 

இடைக்கால முதல்வராக அதிஷி மார்லேனா பணியாற்றி வருகிறார். அம்மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவராக பாஜகவின் வீரேந்திர சச்தேவா இருக்கிறார். டெல்லி மாநிலத்தில் ஏற்கனவே காற்று மாசு, மழைக்காலங்களில் வெள்ளம் தொடர்பான பிரச்சனை, காற்று மாசு உட்பட பல்வேறு விஷயங்கள் பொதுமக்களுக்கு எதிராக நீடிக்கிறது. 

இதையும் படிங்க: ரூ.411 கோடி அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்? அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு.! 

புண்ணிய நதி கிருமிகளின் கூடாரமானது

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு செயல்படுத்தினாலும் பலனில்லை. இதனிடையே, டெல்லியில் ஓடும் யமுனா ஆறு கடந்த சில ஆண்டுகளாக கடுமையான அளவு மாசடைந்து வருகிறது. ஒருகாலத்தில் புண்ணிய நதியாக அறியப்பட்ட யமுனா, இன்று சீர்கேடாகி இருக்கிறது. 

delhi

இதனால் மாநில அரசு யமுனையை சுத்தம் செய்யவில்லை. அந்த நீரை குடிப்பதாலும், அதில் உள்ளுர் மக்கள் குளிப்பதாலும் பல உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்துவதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் அம்மாநில தலைவர் விரேந்திரா, அசுத்தமான யமுனை நதியில் குளித்து விரைந்து அரசு யமுனையை சுத்தம் செய்ய வேண்டும் என தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

உடல்நலக்குறைவுடன் மருத்துவமனையில் அனுமதி

இதனிடையே, அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அவருக்கு தோள்களில் எரிச்சல், சுவாச கோளாறு, உடல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுவாசிப்பதாலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

2025ல் அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியை பிடிக்க பாஜக பல வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அம்மாநில பாஜக தலைவர் அசுத்தமான நீரில் குளித்து, தற்போது மருத்துவமனையில் அனுமதியாகி இருக்கிறார். 

இதையும் படிங்க: திமுகவினர் - பொதுமக்கள் கடும் மோதல் போக்கு.. குமரியில் பரபரப்பு சம்பவம்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!