#Breaking: "ஆதவ் அர்ஜுனனுக்கு அறிவில்லையா?" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்..! 



  Dy CM Udhayanidhi Stalin about VCK Adhav Arjunan 

மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் முதல்வராக இருக்கும்போது, மன்னர் ஆட்சி எப்படி சாத்தியம் என துணை முதல்வர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

திமுகவுக்கு எதிரான பேச்சு

சென்னையில் அம்பேத்கர் புத்தக வெளியீடு விழா நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், நடிகர் & தவெக தலைவர் விஜய், நீதிபதிகள் சந்துரு உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திமுகவுக்கு எதிராக தவெக தலைவர், விசிக ஆதவ் ஆகியோர் பேசி இருந்தனர். 

இதையும் படிங்க: "ஊர்ந்து போய் பதவி பிடித்த கரப்பான் பூச்சி" - எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதிலடி.!

உதயநிதி ஸ்டாலின் பதில்

இந்த பேச்சுக்கள் தமிழக அரசியலில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கி இருந்தது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பியபோது, "சினிமா செய்திகள் நான் பார்ப்பது இல்லை" என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்து இருக்கிறார். 

VCK Adhav Arjunan

அறிவில்லையா

?

தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுவதாக விசிக ஆதவ் அர்ஜுனன் பேசியது குறித்து கேள்வி எழுப்பியபோது, "மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் தான் முதல்வராக உள்ளார் என்ற அறிவுகூட இல்லையா?" என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருமண மண்டப முகாம்களில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்? - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.!