திருமண மண்டப முகாம்களில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்? - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.!



  AIADMK Edappadi Palanisami Request to TN Govt about Please Secure Peoples Who Live on Camp In Marriage Halls Viluppuram Floods 

வலுக்கட்டாயமாக பொதுமக்கள் தற்காலிக்காக முகாம்களில் இருந்து வெளியேற்றப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். 

பெஞ்சல் புயலின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிப்பை சந்தித்த கிராமங்களில் இருக்கும் பொதுமக்கள் மீட்கப்பட்டு திருமண மண்டபங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் தற்காலிக்காக முகாம் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, முகாம்களில் உள்ள மக்கள் கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

முகாமிலிருந்து வெளியேற்றம்?

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "#Fengal புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்டபங்கள் , முகாம்களாக மாற்றப்பட்டு , வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், முகூர்த்தம் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி மக்களை வலுக்கட்டாயமாக திமுக அரசு முகாமிலிருந்து வெளியேற்றி வருவதாக செய்திகள் வருகின்றது. 

இதையும் படிங்க: மக்களின் நிலைமைக்கு திமுக அரசே காரணம் - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.!

Tn govt

திமுக அரசை மன்னிக்கமாட்டார்கள்

ஏற்கனவே புயலின் தாக்கத்தால் மனதைப் பிழியும் சொல்லொண்ணா துயரில் உள்ள மக்களை, உணவு, குடிநீர் ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நடுரோட்டில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த விடியா திமுக அரசு. வயிற்றுபசிக்காகவும்,

நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த இந்த விடியா திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ,மறக்கவோ மாட்டார்கள்.

அரசுக்கு கோரிக்கை

பேரிடர் காலங்களில் மக்களுக்கான உரிய குடிநீர், உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட ஒழுங்காக நிறைவேற்ற முடியாத நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இயல்புநிலை திரும்பும் வரை மக்களுக்கான அனைத்து தேவைகளையும் தடையின்றி கிடைத்திட உறுதி செய்யுமாறு திரு. முக ஸ்டாலின் -ன் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #Breaking: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு தகவல்.!