53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
"நமக்கு எதுக்கு வம்பு... அப்புறம் எங்கள கட்சில இருந்து தூக்கிருவாரு இபிஎஸ்.." முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி.!!
2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு மேல் கால அவகாசம் இருக்கும் நிலையில் மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிமுக தீவிரமாக திட்டங்கள் தீட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகளின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் கள ஆய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கும் கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திருச்சி கள ஆய்வு கூட்டம்
2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திமுகவை வீழ்த்த எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அதிமுக கட்சியினை சீர்படுத்தும் பொருட்டு மாவட்டங்களில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கிடையே ஆய்வு செய்து கட்சியை வலுப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த கள ஆய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.
கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்
இந்தக் கூட்டத்திற்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அதிமுக எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க இருக்கிறது.? என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்து பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டணி குறித்த விஷயங்களை தான் பார்த்துக் கொள்வதாக எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார் என தெரிவித்திருக்கிறார். மேலும் பத்திரிகைகளில் பேட்டி கொடுத்து கூட்டணியை கெடுத்து விட வேண்டாம் எனவும் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "ஊர்ந்து போய் பதவி பிடித்த கரப்பான் பூச்சி" - எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதிலடி.!
நமக்கு எதுக்கு வம்பு
மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சீனிவாசன், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்னையும் தங்கமணியையும் அழைத்து பத்திரிகைகளில் பேட்டி எதுவும் கொடுக்க வேண்டாம் என தெரிவித்திருக்கிறார். நாங்கள் பேட்டி கொடுப்பதால் கூட்டணி ஏற்படுவதில் பிரச்சனையாகிவிடும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். நமக்கு எதுக்கு வம்பு அதனால் நாங்கள் பேட்டியே கொடுப்பதில்லை என முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களுக்கு பரபரப்பாக எதையாவது எழுத வேண்டும். ஆனால் நாங்கள் பேட்டி கொடுத்தால் எங்களை கட்சியிலிருந்து தூக்கி விடுவார் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "திமுக கண்ணில் தோல்வி பயம்; இது பாமகவிற்கு கிடைத்த வெற்றி.." டாக்டர் ராமதாஸ் அறிக்கை.!!