இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
"திமுக கண்ணில் தோல்வி பயம்; இது பாமகவிற்கு கிடைத்த வெற்றி.." டாக்டர் ராமதாஸ் அறிக்கை.!!
புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிர்க்கும் 1,000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தோல்வி பயத்தால் அனைத்து மகளிருக்கும் 1,000 ரூபாய் வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அனைத்து மகளிருக்கும் 1,000 உரிமை தொகை
2021 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலின் போது ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிர்க்கும் 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக கூட்டணி தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. எனினும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் போது குறிப்பிட்ட தகுதிகளை நிர்ணயித்து அந்தப் பெண்களுக்கு மட்டும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தமிழக வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஜனவரி மாதம் முதல் அனைத்து மகளிர்க்கும் 1,000 ரூபாய் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
இந்நிலையில் அனைத்து மகளிருக்கும் 1,000 ரூபாய் கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படுவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தோல்வி பயத்தின் காரணமாக திமுக அனைத்து மகளிர்க்கும் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்க இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ள அவர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் முதியோர் ஓய்வூதிய தொகை ஆகியவற்றை தேர்தலை மனதில் கொண்டு திமுக நிறைவேற்ற இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "பகையை மறந்து இணைவோம்..."மீண்டும் இணைகிறதா அதிமுக - பாஜக கூட்டணி.? தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி.!!
பாமகவுக்கு கிடைத்த வெற்றி
மேலும் இது குறித்து தனது அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்துள்ள அவர் தமிழகத்தில் 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில் 1 கோடியே 20 லட்சத்திற்கும் குறைவான குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர்க்கும் 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தற்போது சட்டமன்றத் தேர்தலுக்கு 15 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் திமுக அரசு அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க இருக்கிறது. இதனை பாமகவின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். எப்படி இருந்தாலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வீழ்வது உறுதியென தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "எனக்கு பயந்து திமுக வெளியிட்ட மொட்டை கடுதாசி.." ஆளும் கட்சிக்கு இபிஎஸ் பதிலடி.!!