#Breaking: புதுச்சேரியில் பதற்றம்.. நாம் தமிழர் - தந்தை பெரியார் இயக்க நிர்வாகிகள் தள்ளுமுள்ளு.., மோதல் சூழல்.!



in Pondicherry NTK Vs Periyar Supporters 09 Jan 2025 

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாவட்ட அளவிலான பயணங்கள் மேற்கொண்டு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே, நேற்று கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வாதத்தை முன்வைத்தார்.

சீமானுக்கு எதிர்ப்பு

இந்த விஷயம் தந்தை பெரியாரின் ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ள நிலையில், இன்று அவரின் வீட்டை முற்றுகையிட முயன்ற சம்பவம் நடைபெற்றது. இந்நிலையில், நா.த.க கட்சி நிர்வகைகளின் ஆலோசனை கூட்டத்திற்கு சீமான் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். இந்த தகவல் அறிந்த பெரியார் இயக்க நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள், சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: இவர்தான் அந்த சார்.. வீதி வீதியாக போஸ்டருடன் களமிறங்கிய திமுக நிர்வாகி.! 

சீமான் மன்னிப்புக்கேள்

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரின் புகைப்படத்தை செருப்பால் அடித்தும், காலால் மிதித்தும் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு சூழல் உண்டாகியுள்ள நிலையில், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 50 க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் இயக்கத்தினர் போராட்டம் நடத்துகின்றனர்.

போரட்டம்-பரபரப்பு

சீமானுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் அங்கு திரண்டதால், இருதரப்பு மோதல் போக்கு உருவாகி இருக்கிறது. இதனால் காவல்துறையினர் அதிகம் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை - நாதக இடையே தள்ளுமுள்ளு சூழலும் ஏற்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு பகுதியில் நடைபெறவுள்ள நாதக ஆலோசனை கூட்டம் காரணமாக, அங்கு ஏற்கனவே நாம் தமிழர் கட்சியினர் இருந்தனர். நாதக-வினர் மண்டபத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "பாலியல் வன்கொடுமை எல்லா ஊர்களிலும் நடைபெறுகிறது" - அமைச்சர் துரைமுருகன் பேச்சு.!