"பாலியல் வன்கொடுமை எல்லா ஊர்களிலும் நடைபெறுகிறது" - அமைச்சர் துரைமுருகன் பேச்சு.!



  Duraimurugan on Rape in Everywhere 

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரம், தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வையை கிளப்பி இருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை பேசுபொருளாக்கி இருந்தன. மேலும், அவையில் விவாதமும் நடைபெறுகிறது.

இதனிடையே, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு அதிமுக, பாஜக, பாமக, நாதக நிர்வாகிகள் போராடியபோது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இன்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதம் நடந்து வந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு, தமிழ்நாடு முதல்வரும் பதில் வழங்கினார்.

tamilnadu politics

துரைமுருகன் பதில்

இதனிடையே, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி உதயகுமார், "குதிரைக்கு கொம்பு முளைத்தாலும் முளைக்கும், தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை நடக்காமல் இருக்காது" என கூறினார். இதற்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன் "தமிழ்நாட்டில் மட்டும் சட்டத்தை மீறும் நபர்கள் இல்லை. கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற ஊர்களிலும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடக்கிறது. 

இதையும் படிங்க: அனுதாபிக்கும் - அமைச்சருக்கும் தொடர்பு என்ன? அருகதை இல்லை உங்களுக்கு - வானதி ஸ்ரீனிவாசன் ஆவேசம்.!

பாலியல் வன்கொடுமை எல்லா ஊர்களிலும் நடைபெறுகிறது. தமிழகத்தை போல பல ஊர்களிலும் சட்டத்தை மீறும் நபர்கள் இருக்கிறார்கள். தவறு இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என பேசினார்.

இதையும் படிங்க: "அந்த சார் ஆளுநராக இருந்தாலும்.," - கொங்கு ஈஸ்வரன் பரபரப்பு பேச்சு.!