Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
அண்ணா பல்கலை., போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவாதம்.. ஜி.கே மணிக்கு முதல்வர் பதில்.!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரம், தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வையை கிளப்பி இருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை பேசுபொருளாக்கி இருக்கிறது. மேலும், அவையில் விவாதமும் நடைபெறுகிறது.
இதனிடையே, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு அதிமுக, பாஜக, பாமக, நாதக நிர்வாகிகள் போராடியபோது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் பாமக முறையீடும் செய்துள்ளது.
பாமக எம்.எல்.ஏ பேச்சு
இந்நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் விவாதத்தில், பாமக எம்.எல்.ஏ ஜி.கே மணி தரப்பில், திமுக ஆளுநரை எதிர்த்து போராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவிக்கு நீதிகேட்டு நாங்கள் போராடியபோது அனுமதி வழங்கப்படவில்லை. கைது செய்யப்பட்டோம் என கூறினார்.
இதையும் படிங்க: "தப்பு இருக்குது, பயம் இருக்குது" - எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்.!
முதல்வர் பதில்
இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, போராட்டத்தின் போது கைது, மாலையில் விடுதலை என்பது தொடர்வதுதான் என கூறினார். அதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின், "போராட்டத்திற்கு அனுமதி வாங்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் அனுமதி தருவார்கள். அது காவல்துறை கட்டுப்பாடு பொறுத்தது. திமுக போராட்டம் நடந்த விவகாரத்தில், ஒருசில இடங்களில் அனுமதி இல்லாமல் நடந்தகாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க: ட்ரெண்டிங்கில் #யார்_அந்த_SIR.. காரணம் என்ன?.. விபரம் உள்ளே.!