ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
"தப்பு இருக்குது, பயம் இருக்குது" - எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்.!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, 2025 சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு உரை நிகழ்த்த வந்திருந்தார். அப்போது, அதிமுக, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள், அமளியில் ஈடுபட்டது. இதனிடையே, தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் ஆர்.என் ரவி தனது உரையை புறக்கணித்து வெளியேறி இருந்தார். இந்த விஷயம் சர்ச்சையானது.
கருப்பை கண்டால் பயம்?
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, "அரசின் உரையை ஆளுநர் வசிப்பது மரபு. ஆனால், இன்று சபாநாயகர் ஆளுநரின் உரையை நிகழ்த்தி இருக்கிறார். ஆளுநர் உரையில் புதிய திட்டம் இல்லை. ஏற்கனவே 4 ஆண்டுகளாக இடம்பெற்ற திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை. கருப்பு துப்பட்டாவை கொடியைப்போல காண்பித்துவிடுவார்கள் என்ற பயத்தில் திமுகவும், முதல்வரும் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: #Breaking: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக கோவை சத்யன் நியமனம்; அதிமுக தலைமை உத்தரவு.!
ஆளுநர் உரையில் புதியது இல்லை
தரமான கல்வி வழங்குவதாக கூறிவிட்டு, 500 பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதாக முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே நபார்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஊரக சாலைக்கு பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. ஆளுநர் உரையில் அரைத்த மாவே அரைக்கப்ட்டுள்ளது. கருப்பை கண்டால் முதல்வர் அச்சப்படுகிறார், அதிர்ச்சி அடைகிறார்.
அரசுக்கு எதிர்க்கட்சிகள் கொடுக்கும் எச்சரிக்கையை கண்டுகொள்வதில்லை. செயலாற்ற அரசாக திமுக இருக்கிறது. கஞ்சா போதை குறித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தபோதே செயல்பட்டு இருந்தால், போதையின் பாதையில் இன்று இளைஞர்கள் சென்று இருக்க மாட்டார்கள்.
தப்பு இருக்கிறது
ஆளுநர் உரை சபாநாயகர் உரையாக மாற்றப்பட்டுள்ளது. திமுக இதில் சுய விளம்பரம் தேடிக்கொண்டு இருக்கிறது. வேறு ஏதும் இல்லை. யார் அந்த சார்? என கேட்டால், இவர்களுக்கு ஏன் இவ்வுளவு கோபம்? அமைச்சர்களை வைத்து அறிக்கை விடுகிறார்கள். அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தில் அதிமுக கொடுத்த அழுத்தமே மாணவிக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பல்கலை., வளாகத்தில் பாதுகாப்பு கொடுக்க இயலாத அரசு எப்படி செயல்படும்? தப்பு இருக்கிறது, அதனால்தான் பயம் இருக்கிறது. உண்மை குற்றவாளியை காப்பாற்ற முயற்சிக்கிறது. இனி இப்படி ஒன்று நிகழக்கூடாது என அதிமுக உறுதியாக இருக்கிறது" என பேசினார்.
இதையும் படிங்க: "எரும மாடா நீ" - மேடையில் உதவியாளரை கடிந்துகொண்ட திமுக அமைச்சர்.. வீடியோ வைரல்.!