இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
செந்தில் பாலாஜியை "மாப்ள" என கூறிய அதிமுக எம்.எல்.ஏ.! அவையில் சிரிப்பலை.!

மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் பொழுது உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கொடுத்து கொண்டு இருந்தார்.
அப்போது, பவானி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப்பண்ணன் பேசிய போது, "தனியார் நிறுவனங்கள் தான் சோலார் மின் தகடுகளை அதிகப்படியாக தயாரித்துக் கொண்டிருக்கின்றன. அவை 100 கே.வி திறன் கொண்டதாக இருக்கின்றன. இதனை 120 கேவி திறன் இருப்பதாக அனுமதிக்க வேண்டும்.
இதன் காரணமாக மின்வாரியத்திற்கு நஷ்டம் எதுவும் இல்லை. இதை மாப்பிள்ளை நிச்சயம் அனுமதிக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். அதாவது, அமைச்சர் செந்தில் பாலாஜியை தான் அவர், 'மாப்பிள்ளை' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: #Breaking: அதிமுக கூட்டணியில் மீண்டும் பாமக? ராமதாஸ் பச்சைக்கொடி?.. பரபரப்பு பேட்டி.!
கருப்பண்ணனின் இந்த பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர், "பழக்க தோஷத்தில் கூறிவிட்டேன். சாரி..! சாரி..!" என்று கூறி சமாளித்தார். அவரது, இந்த பேச்சு அமைச்சர் செந்தில் பாலாஜியை வெட்கப்பட வைத்தது.