மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பிரதமர் மோடி தவறான தகவல்களை பரப்புகிறார்.." திருச்சி சிவா பரபரப்பு குற்றச்சாட்டு.!!
நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை பிரதமர் மோடி பரப்பி வருகிறார் என மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். இவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மக்களவை கூட்டத் தொடர்
18-வது பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் புதிய மக்களவையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி உரை நிகழ்த்தினார். குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதம் பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு
நேற்று மக்களவையில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி இந்திய அரசியல் சாசனம் குறித்து பேசினார். இதற்கு எதிர்க்கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் சாசனம் தேர்தல் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து மோடி பொய்யான தகவல்களை கூறுவதாக குற்றம் சாட்டினர். எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுனா கார்கேவை பேச அனுமதிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதற்கு மாநிலங்களவை சபாநாயகர் அனுமதி வழங்காததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் பரபரப்பு... லண்டன் செல்லும் அண்ணாமலை.!!பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம்.?
பிரதமர் மீது திருச்சி சிவா குற்றச்சாட்டு
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிவா, எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி தனது பேச்சுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கோரிக்கை வைத்தும் அவரது கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை என தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறார். அவரது பேச்சுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் திருச்சி சிவா தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பட்டப் படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை.." நீட் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ் பாரதி சர்ச்சை பேச்சு.!!